'வந்தே மாதரம்' என்ற பாடலின் உணர்வு இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது: ‘மன் கீ பாத்’தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி

October 26th, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், அக்டோபர் 31 அன்று சர்தார் படேலின் 150வது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சத் பூஜை விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இந்திய நாய் இனங்கள், இந்திய காபி, பழங்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர் தொட்டார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து பிரதமர் சிறப்புரையாற்றினார்.

GST reforms will accelerate India's growth story: PM Modi

September 21st, 06:09 pm

In his address to the nation, PM Modi announced that from the very first day of Navratri, on 22nd September, the country will implement Next-Generation GST reforms. He noted that this marks the beginning of a ‘GST Bachat Utsav’. Recalling that India had taken its first steps towards GST reform in 2017, the PM emphasized that the reform is a continuous journey. He also urged citizens to proudly reaffirm their commitment to Swadeshi.

பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

September 21st, 05:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சக்தியை வழிபடும் பண்டிகையான நவராத்திரியின் தொடக்கத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நவராத்திரியின் முதல் நாளிலிருந்தே, நாடு தற்சார்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க படியை எடுத்து வைப்பதாகக் குறிப்பிட்டார். 2025 செப்டம்பர் 22 அன்று சூரிய உதயத்தின்போது, நாடு அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகிறது என்று அவர் கூறினார். இது இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்த விழா சேமிப்பை அதிகரிக்கும் என்றும், மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதை எளிதாக்கும் என்றும் அவர் கூறினார். இந்த சேமிப்புத் திருவிழாவின் நன்மைகள் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், புதிய நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், கடைக்காரர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் என அனைவரையும் சென்றடையும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த பண்டிகைக் காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டு இனிமையான சூழல் உருவாகும் என்று அவர் கூறினார். அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களுக்காகவும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடக்கத்திற்காகவும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்குப் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, வணிக நடவடிக்கைகளை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈர்க்கும் என்று அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிக்கான போட்டியில் சமமான பங்களிப்பை வழங்குவதை அது உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவின் பெங்களூருவில் பல்வேறு மெட்ரோ திட்டங்களின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்

August 10th, 01:30 pm

கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதல்வர் திரு சித்தராமையா அவர்களே, மத்தியில் உள்ள எனது சகாக்கள் திரு மனோகர் லால் கட்டார், திரு ஹெச்டி குமாரசாமி, திரு அஷ்வினி வைஷ்ணவ், திரு வி சோமன்னா, திருமதி ஷோபா அவர்களே, துணை முதல்வர் திரு டி.கே.சிவகுமார் அவர்களே, கர்நாடக அமைச்சர் திரு பி.சுரேஷ் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு ஆர். அசோக் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா அவர்களே, டாக்டர் மஞ்சுநாத் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயேந்திர எடியூரப்பா அவர்களே மற்றும் கர்நாடகாவின் எனது சகோதர சகோதரிகளே!

கர்நாடகாவின் பெங்களூருவில் சுமார் ₹22,800 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

August 10th, 01:05 pm

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ₹ 7,160 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் வழித்தடப் பாதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.08.2025) திறந்து வைத்தார். பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் மூன்று வந்தே பாரத் விரைவு ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கர்நாடக மாநிலத்தில் கால் வைத்தவுடன், தான் ஒரு சிறந்த உணர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவின் கலாச்சார செழுமை, அதன் மக்களின் பாசம், இதயத்தை ஆழமாகத் தொடும் கன்னட மொழியின் இனிமை ஆகியவற்றை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, பெங்களூருவின் தலைமை தெய்வமான அன்னம்மா தாயின் பாதங்களில் மரியாதை செலுத்தி தமது உரையைத் தொடங்குவதாகக் கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நடபிரபு கெம்பேகவுடா பெங்களூரு நகரத்திற்கு அடித்தளமிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், கெம்பேகவுடா பாரம்பரியத்தில் வேரூன்றியதாக இந்த நகரம் உள்ளது என்பதை எடுத்துரைத்தார். முன்னேற்றத்தின் புதிய உயரங்களை இந்நகரம் எட்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பெங்களூரு எப்போதும் சிறந்த உணர்வை பாதுகாத்து வருகிறது எனவும் இப்போது பெங்களூரு புதிய கனவுகளை நனவாக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி கர்நாடகாவிற்கு பிரதமர் பயணம்

August 09th, 02:20 pm

கர்நாடக மாநிலத்துக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். பெங்களூருவில் உள்ள கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில், காலை 11 மணியளவில் 3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதன் பிறகு, பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் பாதையை அவர் தொடங்கி வைத்து, ஆர்வி சாலை (ராகிகுடா) முதல் எலக்ட்ரானிக் சிட்டி மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்வார்.

இந்திய அரசுக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் இடையே ஓர் உத்திசார் கூட்டாண்மையை நிறுவுவது குறித்த பிரகடனம்

August 05th, 05:23 pm

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிலிப்பைன்ஸ் அதிபர் மேதகு திரு. ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர், 2025 ஆகஸ்ட் 4 முதல் 8 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் திரு மார்கோஸுடன் முதல் பெண்மணி திருமதி லூயிஸ் அரனெட்டா மார்கோஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட வணிகக் குழு உள்ளிட்ட அலுவலர்கள் குழுவும் வந்துள்ளது.

இந்திய-ஆஸ்திரேலிய 2-வது வருடாந்திர உச்சிமாநாடு

November 19th, 11:22 pm

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் நவம்பர் 19, 2024 அன்று ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய-ஆஸ்திரேலிய இரண்டாவது வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர்.

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 29 அன்று பிரதமர் சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்

October 28th, 12:47 pm

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் ஒன்பதாவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 29 அன்று நண்பகல் மதியம் 12:30 மணியளவில், புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ .12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத்துறை தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

October 24th, 07:47 am

பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் மாலத்தீவுகள்: விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு பார்வை

October 07th, 02:39 pm

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு ஆகியோர், 2024 அக்டோபர் 7 அன்று சந்தித்து, இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் விரிவாக மதிப்பாய்வு செய்தனர், அதே நேரத்தில், இரு நாடுகளின் மக்களின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களித்த வரலாற்று ரீதியாக நெருக்கமான மற்றும் சிறப்பு உறவை ஆழப்படுத்துவதில் இரு நாடுகளும் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்டனர்.

நாதபிரபு திரு கெம்பே கவுடாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்

June 27th, 04:06 pm

நாதபிரபு திரு கெம்பே கவுடாவின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். நாதபிரபு திரு கெம்பே கவுடா, பொருளாதார நலன், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் என திரு மோடி தெரிவித்துள்ளார்.

Bengaluru Viksit Bharat Ambassadors Gather for an ‘Evening of Music and Meditation’ on Ram Navami

April 18th, 05:13 pm

On Wednesday, April 17th, over 10,000 people from different s gathered at The Art of Living International Centre in Bengaluru for an event called An Evening of Music and Meditation with Viksit Bharat Ambassadors. The attendees included people from all walks of life, including Art of Living disciples, instructors, professionals, and educated inpiduals of various ages.

Boeing’s new facility is a clear indication of Karnataka’s rise as a new aviation hub: PM Modi

January 19th, 03:15 pm

Prime Minister Narendra Modi inaugurated the new state-of-the-art Boeing India Engineering & Technology Center (BIETC) campus in Bengaluru, Karnataka. Addressing the gathering, PM said that Bengaluru is a city which links aspirations to innovations and achievements, and India’s tech potential to global demands. “Boeing’s new technology campus is going to strengthen this belief”, the Prime Minister said, informing that the newly inaugurated campus is Boeing’s largest facility located outside the USA.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்

January 19th, 02:52 pm

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19-01-2024) திறந்து வைத்தார். ரூ. 1,600 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 43 ஏக்கர் பரப்பளவிலான இந்த வளாகம் அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும். நாட்டில் வளர்ந்து வரும் விமானத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிகமான பெண் குழந்தைகள் நுழைவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போயிங் சுகன்யா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு பிரதமர் பயணம்

January 17th, 09:32 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10.45 மணியளவில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 2:45 மணியளவில், கர்நாடகாவின் பெங்களூருவில் போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைக்கும் பிரதமர், போயிங் சுகன்யா திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 இன் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்பார்.

கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையம், சிறந்த உள்புற வடிவமைப்புக்கான உலகளாவிய சிறப்புப் பரிசை வென்றதற்காக பெங்களூரு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

December 23rd, 05:53 pm

கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையம், விமான நிலையங்கள் பிரிவில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த உள்புற வடிவமைப்புக்கான உலகளாவிய சிறப்புப் பரிசை வென்றுள்ளதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (23.12.2023) பெங்களூரு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Aatmanirbharta in Defence: India First Soars as PM Modi Takes Flight in LCA Tejas

November 28th, 03:40 pm

Prime Minister Narendra Modi visited Hindustan Aeronautics Limited (HAL) in Bengaluru today, as the state-run plane maker experiences exponential growth in manufacturing prowess and export capacities. PM Modi completed a sortie on the Indian Air Force's multirole fighter jet Tejas.

பெங்களூரு மெட்ரோவின் கத்திரிப்பூ நிற வழித்தடத்தின் இரண்டு முக்கிய வழித்தடங்களில் சேவைகளைத் தொடங்குவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி

October 09th, 06:28 pm

பெங்களூரு மெட்ரோவின் கத்திரிப்பூ வழித்தடத்தின் இரண்டு முக்கிய வழித்தடங்களில் சேவைகள் தொடங்கப்படுவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களூரு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு

August 26th, 10:08 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பெங்களூரு வந்தடைந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர், பின்னர் கிரீஸ் சென்றார். பிரதமர் பல்வேறு இருதரப்பு சந்திப்புகள் மற்றும் உள்ளூர் சிந்தனைத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தினார். இரு நாடுகளிலும் உள்ள துடிப்பான இந்திய சமூகங்களையும் அவர் சந்தித்தார். காணொலி மூலம் சந்திரயான்-3-ன் லேண்டர், நிலவில் தரையிறங்குவதை நேரில் கண்டு களித்த பிரதமர், பின்னர் இஸ்ரோ குழுவினருடன் கலந்துரையாட நேராக பெங்களூரு வந்தடைந்தார்.