Cabinet approves Rs.1,500 crore Incentive Scheme to promote Critical Mineral Recycling in the country
September 03rd, 07:16 pm
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi today approved a Rs.1,500 crore Incentive Scheme to develop recycling capacity in the country for the separation and production of critical minerals from secondary sources.ஜப்பான் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
August 29th, 03:59 pm
இன்றைய எங்கள் கலந்துரையாடல், ஆக்கப்பூர்வமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் துடிப்பான ஜனநாயக நாடுகள் என்ற வகையில், எங்கள் கூட்டாண்மை, இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.குஜராத் மாநிலம் ஹன்சால்பூரில் பசுமை போக்குவரத்து வாகனத் திட்டங்களைத் தொடங்கிவைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 26th, 11:00 am
மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு கீச்சி ஒனோ சான் அவர்களே, சுசுகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசுகி சான் அவர்களே, மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹிசாஷி தக்கூச்சி சான் அவர்களே, தலைவர் ஆர் சி பார்கவா அவர்களே, ஹன்சால்பூர் தொழிற்சாலையின் ஊழியர்களே, சிறப்புமிக்க பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,குஜராத்தின் ஹன்சல்பூரில் பசுமை இயக்கம் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
August 26th, 10:30 am
குஜராத்தின் ஹன்சல்பூரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பசுமை இயக்க முயற்சிகளைத் தொடங்கி வைத்தார். பசுமை எரிசக்தித் துறையில் தன்னிறைவை எட்டும் வகையில், பெரிய முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கு இது உதவும். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், கணேஷ் உத்சவத்தின் பண்டிகை உற்சாகத்தின் மத்தியில், 'இந்தியாவில் தயாரிப்போம்' பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இது இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம் என்ற பகிரப்பட்ட இலக்கை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்குச் சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் இன்று முதல் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று திரு. மோடி தெரிவித்தார். நாட்டில் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவுக்கும் இது ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவருகிறது என்பதை வலியுறுத்திய பிரதமர், இந்தியாவின் அனைத்து மக்களுக்கும், ஜப்பானுக்கும், சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.