‘பஸ்தார் பாண்டும்’ திருவிழாவின் சிறப்புக் கொண்டாட்டத்திற்காக சத்தீஸ்கர் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

February 10th, 10:42 am

சத்தீஸ்கரில் பிப்ரவரி 7 முதல் 9 வரை நடைபெறும் ‘பஸ்தார் பாண்டும்’ திருவிழாவின் சிறப்புக் கொண்டாட்டத்திற்காக சத்தீஸ்கர் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இத்திருவிழாவில் பஸ்தாரின் வளமையான கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் பழங்குடியின பாரம்பரியம் குறித்து சிறப்பான வழிகளில் எடுத்துக்காட்டப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் நமது கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் உள்ளூர் சமூகத்தினருக்கு அதிகாரம் அளிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.