ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்களின் சிறப்புகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
October 21st, 09:30 am
இந்தியக் கடற்படையினருடன் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தாம் கலந்து கொண்ட தீபாவளிக் கொண்டாட்டங்களின் சிறப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்நாள் சிறப்புமிக்க நாள் என்றும், சிறப்புமிக்க தருணம் என்றும், சிறப்புமிக்க பார்வையுடையது என்றும் குறிப்பிட்ட திரு மோடி, ஒரு புறம் பரந்த அளவிலான கடலும் மற்றொரு புறம் இந்தியத் தாயின் துணிச்சல்மிக்க வீரர்களின் மகத்துவமான வலிமையும் இருப்பதாக சுட்டிக்காட்டினார். கடலில் எழும் சூரியக் கதிர்கள், தீபாவளி பண்டிகையின் போது, துணிச்சல் மிக்க வீரர்கள் ஏற்றிய புனிதமிக்க ஒளிவிளக்குகளைப் போன்று காணப்படுவதாக குறிப்பிட்டார்.