Prime Minister congratulates Tarique Rahman on Bangladesh election victory; reaffirms India’s commitment to bilateral ties

February 13th, 04:40 pm

The Prime Minister, Shri Narendra Modi, spoke with Tarique Rahman and congratulated him on the remarkable victory in the Bangladesh elections.

Prime Minister congratulates Mr. Tarique Rahman on BNP's victory in the Parliamentary elections in Bangladesh

February 13th, 12:13 pm

PM Modi congratulated Mr. Tarique Rahman on leading the BNP to a decisive victory in the parliamentary elections in Bangladesh. He added that India will continue to support a democratic, progressive and inclusive Bangladesh. The PM also said he looks forward to working together to strengthen multifaceted ties and advance shared development goals.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

December 30th, 10:06 am

பங்களாதேஷ் முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசிய கட்சி தலைவருமான பேகம் கலிதா ஜியா டாக்காவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேகம் கலிதா ஜியா விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 01st, 10:30 pm

பங்களாதேஷின் பொது வாழ்க்கைக்கு பல ஆண்டுகள் பங்களிப்பு செய்துள்ள பேகம் கலிதா ஜியாவின் உடல்நலம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்றாலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார்.

டாக்காவில் நடந்த ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 21st, 07:07 pm

டாக்காவில் நிகழ்ந்த ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களில் பலர் இளம் மாணவர்கள் என்று குறிப்பிட்டதுடன், வங்கதேசத்துடன் இந்தியா ஒற்றுமையாக இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கிடையே வங்கதேசத்தின் முதன்மை ஆலோசகரைப் பிரதமர் சந்தித்தார்

April 04th, 03:49 pm

பாங்காக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கிடையே வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுசை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

2025 ஏப்ரல் 03-06 வரை தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பிரதமரின் பயணம்

April 02nd, 02:00 pm

பாங்காக்கில் நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 3-4, 2025) தாய்லாந்துக்குச் செல்கிறார். அதன் பிறகு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் (ஏப்ரல் 4-6, 2025).

ஸ்ரீஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை

March 27th, 03:00 pm

ஸ்ரீஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதற்கும், சமத்துவம், கருணை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும் ஸ்ரீ தாக்கூர் ஆற்றிய பணிகளைப் பாராட்டியுள்ள திரு மோடி, மாத்துவா தர்ம மகா மேளா 2025-க்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர்

February 14th, 06:46 pm

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மூலோபாய, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். அவர் தங்கியிருந்த காலத்தில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் இராஜதந்திரம் போன்ற முக்கியமான பகுதிகளை உள்ளடக்கிய அமெரிக்கத் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் பிரதமர் மோடி தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்த விஜயம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியது, புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதில் இரு நாடுகளையும் உலகளாவிய பங்காளிகளாக நிலைநிறுத்தியது.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-ஆவது நிறுவன தினத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 14th, 10:45 am

மத்திய அமைச்சர்கள் குழுவின் எனது சக நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, டபிள்யூ.எம்.ஓவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டி சவுலோ அவர்களே, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள எங்கள் விருந்தினர்களே, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம் ரவிச்சந்திரன் அவர்களே, ஐ.எம்.டியின் தலைமை இயக்குநர் டாக்டர். மிருத்யுஞ்சய் மொஹபத்ரா அவர்களே, பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் விஞ்ஞானிகளே, அதிகாரிகளே, தாய்மார்களே, அன்பர்களே!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

January 14th, 10:30 am

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று (14.01.2024) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல என்றும் இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்துள்ளது என்றும் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் அவர் பாராட்டினார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சாதனைகள் குறித்த நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் இன்று பிரதமர் வெளியிடப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எதிர்காலத்தை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். ஐஎம்டி எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது ஆண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் திரு பைடனுடன் பிரதமர் திரு மோடி பேச்சு

August 26th, 10:03 pm

அமெரிக்க அதிபர் மேதகு திரு. ஜோசப் ஆர். பைடன், பிரதமர் திரு. நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பிரதமருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

August 16th, 04:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.08.2024) பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுசுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வங்கதேசத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸுக்கு பிரதமர் வாழ்த்து

August 08th, 10:26 pm

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பங்களாதேஷ் பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணத்தின்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 22nd, 01:00 pm

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட பத்து முறை சந்தித்திருந்தாலும், இன்றைய கூட்டம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் எங்களது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா எங்களது முதல் அரசு விருந்தினராக இப்போது வந்துள்ளார்.

பிரதமர் திரு மோடிக்கு வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 05th, 08:04 pm

18-வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்காக வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா பிரதமர் திரு. நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்ற வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 08th, 07:54 pm

நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்ற வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

December 27th, 08:36 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 134.913 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 208-இன் கோவாய் முதல் ஹரினா வரையிலான சாலையை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச பிரதமர்கள் நவம்பர் 1 ஆம் தேதி மூன்று வளர்ச்சித் திட்டங்களை கூட்டாக தொடங்கி வைக்கிறார்கள்

October 31st, 05:02 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் மேதகு ஷேக் ஹசீனாவும் இணைந்து நவம்பர் 1 ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொளிக் காட்சி மூலம் மூன்று இந்தியாவின் உதவியுடன் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றதற்கு பிரதமர் பாராட்டு

October 19th, 10:25 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்தியக் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.