Yoga is the best way to maintain a healthy lifestyle with minimal expense: PM Modi at World Yogasana Championship in Ahmedabad
June 04th, 06:41 pm
PM Modi inaugurated the first World Yogasana Championship in Ahmedabad, calling yoga India’s timeless gift to humanity and expressing confidence that Yogasana will gain recognition as a competitive sport in global multi-sport events, including the Olympics. Highlighting yoga’s role in health, wellness and healthy ageing, he urged participants to become ambassadors of the ‘Yoga 365’ campaign and spread yoga’s message worldwide.முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியை அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 04th, 06:40 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் உலக விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகப் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்க வந்துள்ள சர்வதேச விளையாட்டு வீரர்களை வரவேற்ற அவர், யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுவது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும் என்றார். ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த சாம்பியன் போட்டி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் இரட்டிப்பு பலனை நமக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இம்முறை சர்வதேச யோகா தினத்தின் முதன்மை நிகழ்வு மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்."அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் நாளை பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
March 08th, 04:35 pm
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல் என்ற தலைப்பில் நாளை (மார்ச் 9, 2026) நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காலை 10:15 மணிக்கு காணொளி மூலம் உரையாற்றுகிறார்.பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்
September 24th, 06:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 25 காலை 9.30 மணியளவில் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ அவர் தொடங்கிவைப்பார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.இந்தியா-மொரீஷியஸ் நாடுகளின் கூட்டறிக்கை- சிறப்பு பொருளாதார தொகுப்பு
September 11th, 01:53 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திரா ராம்கூலம் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருதலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது என்றும், இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-மொரீஷியஸ் நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி புதிய சர் சிவூசாகூர் ராம்கூலம் தேசிய மருத்துவமனை, ஆயுஷ் சீர்மிகு மையம், கால்நடை பள்ளி மற்றும் விலங்குகளுக்கான மருத்துவமனை, ஹெலிகாப்டர் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் மானிய உதவியுடன் இருநாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. இத்திட்டங்களுக்காக 215 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (1.80 பில்லியன் மொரீஷியஸ் ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மானிய உதவியுடன் கூடிய வங்கிக்கடன்கள் மூலம் எஸ்எஸ்ஆர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய தானியங்கி தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்தும் உபகரணங்களுடன் கூடிய வளாகம், சாலை கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுப்புறச்சாலையில் 2-ம் கட்டப்பணிகள் மற்றும் துறைமுகங்களுக்கான உபகரணங்களை கொள்முதல் செய்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதற்கென 440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மொரீஷியஸ் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 11th, 12:30 pm
எனது மக்களவைத் தொகுதிக்கு உங்களை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். காசி என்பது எப்போதும் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டு தொலைநோக்கு: சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வழிநடத்த எட்டு வழிகாட்டுதல்கள்
August 29th, 07:11 pm
சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் நீண்ட பாரம்பரியத்தையும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும் கொண்ட இந்தியாவும் ஜப்பானும், அடுத்த பத்தாண்டுகளில் உள் நாட்டிலும் உலகிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை கூட்டாக வழிநடத்தவும், அந்தந்த நாட்டு இலக்குகளை அடைய உதவவும், நமது நாடுகளையும் அடுத்த தலைமுறை மக்களையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டுவரவும் எங்கள் நோக்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமரின் உரை
June 21st, 07:06 am
ஆந்திரப் பிரதேச ஆளுநர் சையத் அப்துல் நசீர் அவர்களே, இந்த மாநிலத்தின் முதலமைச்சர், எனது அன்பு நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், கே. ராம்மோகன் நாயுடு அவர்களே, பிரதாப்ராவ் ஜாதவ் அவர்களே, சந்திரசேகர், பூபதி ராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா, மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்களே, பிற பிரமுகர்கள் மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 21st, 06:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின நிகழ்வில் உரையாற்றினார். சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கி யோகா அமர்வில் பங்கேற்றார்.மனதின் குரல் (122ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25-05-2025
May 25th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறது, ஆவேசம் நிறைந்திருக்கிறது, உறுதிப்பாட்டோடு இருக்கிறது. நாம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியேயாக வேண்டும், இதுதான் இன்று அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு. நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூரின் போது, நமது படைகள் வெளிப்படுத்திய பராக்கிரமம், இந்தியர்கள் அனைவரின் தலைகளையும் பெருமையில் உயர்த்தியது. நமது படையினர் கையாண்ட துல்லியம் மற்றும் தீவிரமான தாக்குதல் காரணமாக எல்லை தாண்டியிருக்கும் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் நாசம் செய்யப்பட்டன, இது அற்புதமான விஷயம். ஆப்பரேஷன் சிந்தூர், உலகம் முழுவதிலும் இருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் புதியதொரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 11:00 am
ஐடிவி நெட்வொர்க் நிறுவனரும் நாடாளுமன்றத்தில் எனது சகாவுமான கார்த்திகேய சர்மா அவர்களே, இந்த நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த குழுவினரே, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களே, தாய்மார்களே வணக்கம். நியூஸ் எக்ஸ் வேர்ல்டின் மங்களகரமான தொடக்கத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று, இந்தி, ஆங்கிலம் உட்பட உங்கள் நெட்வொர்க்கின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளும் உலக அளவில் செல்கின்றன.என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
March 01st, 10:34 am
கடந்த காலங்களில் இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொண்டதாகவும், ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் இப்போது ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்த சாதனைக்காக சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுபோன்ற ஊடக நிகழ்வுகள் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். இதன் உச்சிமாநாடு, கொள்கைகள் பற்றிய விவாதத்தில் கவனம் செலுத்தியது என்றும், அரசியலை மையமாகக் கொண்டு ஒப்பிடும்போது கொள்கைகள் மையமாக இருந்தன ன்றும் அவர் கூறினார். இந்த உச்சிமாநாடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஒரு புதுமையான மாதிரியில் பணியாற்றியுள்ளதாக ஒப்புக் கொண்ட அவர், மற்ற ஊடக நிறுவனங்கள் இந்த போக்கையும் வார்ப்புருவையும் தங்கள் சொந்த புதுமையான வழிகளில் வளப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.ஆயுஷ் துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
February 27th, 08:14 pm
ஆயுஷ் துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், முழுமையான நல்வாழ்வு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு, பாரம்பரிய அறிவைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் ஆரோக்கிய சூழலியலில் பங்கேற்பது ஆகியவற்றில் ஆயுஷ் துறையின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் 7, லோக் கல்யாண் மார்க்கில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025 தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 24th, 10:35 am
நான் இங்கு வரத் தாமதமானதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தாமதம் ஏற்பட்டது ஏனென்றால் நான் நேற்று இங்கு வந்தபோது, இன்று, 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருப்பதை உணர்ந்தேன். நான் ஆளுநர் மாளிகையை விட்டு புறப்படும் நேரமும் அவர்களின் தேர்வுகள் நடக்கும் நேரமும் ஒன்றாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகள் மூடப்பட்டால், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அனைத்து மாணவர்களும் தேர்வு மையங்களுக்கு வந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்னரே ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட முடிவு செய்தேன். எனவே, நான் வேண்டுமென்றே எனது புறப்பாட்டை 15-20 நிமிடங்கள் தாமதப்படுத்தினேன். இது உங்கள் அனைவருக்கும் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கும். எனவே, உங்கள் அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு-2025 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 24th, 10:30 am
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கு வரும் வழியில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாநாட்டில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு மன்னிப்பு கோரினார். ராஜா போஜ் பூமியில் முதலீட்டாளர்களையும், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களையும் வரவேற்பதில் பெருமை கொள்வதாக திரு மோடி கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் வளர்ச்சி அடைந்த மத்தியப் பிரதேச மாநிலம் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கும் என்பதால் இன்றைய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த உச்சிமாநாட்டை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக மத்தியப் பிரதேச மாநில அரசிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.முடிவுகளின் விபரம்: இந்தோனேசிய அதிபரின் அரசுமுறை இந்திய பயணம் (ஜனவரி 23-26, 2025)
January 25th, 08:54 pm
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய சுகாதார அமைச்சகம் இடையே சுகாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
January 05th, 12:15 pm
ரூ 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களின் முக்கிய கவனம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதும் பயணத்தை எளிதாக்குவதும் ஆகும். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலிலும் பிரதமர் பயணம் மேற்கொண்டார்.அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 29th, 01:28 pm
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சரவை நண்பர்கள் திரு ஜகத் பிரகாஷ் நத்தா, திரு மன்சுக் மாண்டவியா, திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்வீர் சிங் பிதுரி அவர்களே, மாநில ஆளுநர்களே, முதலமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மருத்துவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆயுஷ் மற்றும் சுகாதார வல்லுநர்களே, சுகாதார அமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளே!சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
October 29th, 01:00 pm
தன்வந்தரி ஜெயந்தி, 9-வது ஆயுர்வேத தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.10.2024) புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சுமார் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதாரத் துறை தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.Many people want India and its government to remain weak so that they can take advantage of it: PM in Ballari
April 28th, 02:28 pm
Prime Minister Narendra Modi launched the poll campaign in full swing for the NDA in Karnataka. He addressed a mega rally in Ballari. In Ballari, the crowd appeared highly enthusiastic to hear from their favorite leader. PM Modi remarked, “Today, as India advances rapidly, there are certain countries and institutions that are displeased by it. A weakened India, a feeble government, suits their interests. In such circumstances, these entities used to manipulate situations to their advantage. Congress, too, thrived on rampant corruption, hence they were content. However, the resolute BJP government does not succumb to pressure, thus posing challenges to such forces. I want to convey to Congress and its allies, regardless of their efforts... India will continue to progress, and so will Karnataka.”