Prime Minister Congratulates Indian Deaflympians on extraordinary performance at 25th Summer Deaflympics 2025 in Tokyo

November 27th, 05:10 pm

The Prime Minister, Shri Narendra Modi, extended his heartiest congratulations to India’s Deaflympians, today, for their extraordinary performance at the 25th Summer Deaflympics 2025 held in Tokyo.

உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டிகளில் சிறப்பான சாதனைகளுக்காக இந்திய விளையாட்டு வீரர்களுக்குப் பிரதமர் பாராட்டு

November 24th, 12:22 pm

உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி 2025-ல், இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, சாதனை படைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

November 17th, 05:59 pm

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

November 02nd, 01:09 pm

2025 ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டு 48 பதக்கங்களை வென்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி வீரர்களுக்குப் பிரதமர் வரவேற்பு

September 27th, 06:03 pm

இன்று தொடங்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025-ஐ இந்தியா பெருமையுடன் புதுதில்லியில் நடத்தும் நிலையில், அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் தங்கம் வென்ற மினாக்ஷிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

September 14th, 07:48 pm

லிவர்பூலில் நடைபெற்ற 2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மினாக்ஷியின் அசாதாரண வெற்றிக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-ல் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 14th, 07:44 pm

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-ல் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியாவின் அபாரமான வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.

August 31st, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.

உலான்பாதர் ஓபன் 2025 இல் அற்புதமான செயல்திறனுக்காக மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

June 02nd, 08:15 pm

உலான்பாதர் ஓபன் 2025 இல் நடந்த 3வது தரவரிசை தொடரில் மல்யுத்த வீரர்களின் அற்புதமான செயல்திறனுக்காக அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தரவரிசை தொடரில் நமது பெண்கள், அவர்களின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது, இந்த சாதனையை இன்னும் மறக்கமுடியாததாக ஆக்குகிறது. இந்த சிறந்த செயல்திறன், ஏராளமான வருங்கால விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று திரு மோடி கூறினார்.

2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

June 02nd, 03:01 pm

தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை சிறப்பான செயல்பாட்டிற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகக் காணப்பட்டது என்று திரு. மோடி கூறியுள்ளார்.

உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 33 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

March 18th, 02:40 pm

இத்தாலியில் உள்ள டுரின் நகரில் நடைபெற்ற உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய தடகள வீரர்களின் சிறப்பான செயல்திறனை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்திய அணி 33 பதக்கங்களைத் தாயகத்திற்கு கொண்டு வந்து, உலக அரங்கில் நாட்டிற்குப்ஸபெருமை சேர்த்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 28th, 09:36 pm

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!

டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

January 28th, 09:02 pm

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்திருப்பது குறித்து பிரதமர் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்

September 04th, 04:33 pm

பாராலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று இந்திய பாராலிம்பிக் அணி சாதனை படைத்திருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதமும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை பாராட்டியுள்ள திரு மோடி, ஒவ்வொரு வீரரையும் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக புகழ்ந்துரைத்துள்ளார்.

பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

August 19th, 06:30 pm

பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சிகரமான உரையாடலை மேற்கொண்டார். ஷீத்தல் தேவி, அவனி லெகரா, சுனில் அண்டில், மாரியப்பன் தங்கவேலு மற்றும் அருணா தன்வார் போன்ற விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நேரில் பேசினார். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய குழுவினருக்கு பிரதமர் பாராட்டு

August 11th, 11:40 pm

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றுவந்த 2024 ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவடைந்த நிலையில், இந்தியக் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.