உலகம் இப்போது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை எதிர்நோக்க வேண்டும்: விண்வெளி ஸ்டார்ட்அப் தலைமைச் செயல் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி

August 23rd, 11:42 am

விண்வெளி ஸ்டார்ட்அப் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஒரு புதிய துறையில் நுழைவதற்கான அவர்களின் துணிச்சலைப் பாராட்டியதோடு, அவர்களுடன் உரையாடினார். இந்தக் கலந்துரையாடலில், விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவது, இந்திய நிறுவனங்களுக்கு அரசின் ஆதரவு, தானியங்கி விண்கலங்கள், அடிக்கடி நடைபெறும் ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் இந்தியாவின் முதல் விண்வெளி-மருந்து ஸ்டார்ட்அப் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெற்றன.

விண்வெளி ஸ்டார்ட்அப் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

August 23rd, 11:30 am

ஒரு புதிய துறையில் நுழைவதற்கான அவர்களின் துணிச்சலைப் பாராட்டிய பிரதமர் மோடி, விண்வெளி ஸ்டார்ட்அப் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில், விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவது, இந்திய நிறுவனங்களுக்கு அரசின் ஆதரவு, தானியங்கி விண்கலங்கள், அடிக்கடி நடைபெறும் ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் இந்தியாவின் முதல் விண்வெளி-மருந்து ஸ்டார்ட்அப் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெற்றன.

விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

August 21st, 02:21 pm

20 விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, ​​இந்தியாவின் வளர்ந்து வரும் தனியார் விண்வெளிச் சூழலமைப்பையும், உலகளாவிய திறமையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் அதன் ஆற்றலையும் அவர் எடுத்துரைத்தார். விண்வெளித் தொழில்நுட்பத்தின் பரந்த பயன்பாடுகள், வலுவான தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் இளம் உள்ளங்களை விண்வெளியை நோக்கி ஊக்குவிப்பதற்கான பெரும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவர் ஊக்கப்படுத்தினார்.

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

August 15th, 04:44 pm

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. மோடி இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் துறை, டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கான சேவைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை அவர் முன்வைத்தார். அத்துடன், நாட்டின் லட்சியங்களை அடைவதற்கான ஏழு முக்கிய துறைகளை உள்ளடக்கிய 'சப்த தாரா' (Sapta Dhara) எனும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

மாற்றத்தின் 12 ஆண்டுகள்: சுதந்திர தின உரையில் நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி

August 15th, 01:18 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். உற்பத்தித் துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், எரிசக்திப் பாதுகாப்பு, இளைஞர் மேம்பாடு, புத்தாக்கம், சமூகப் பாதுகாப்பு, பிற முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Through the efforts and hard work of 140 crore citizens, we must achieve the goal of Viksit Bharat: PM Modi on 80th Independence Day at Red Fort

August 15th, 07:00 am

PM Modi, in his address to the nation on the 80th Independence Day from the Red Fort, spoke about the dream of building a Viksit Bharat by 2047, powered by the strength and resolve of 140 crore Indians. He highlighted key initiatives such as the SHANTI Act, Railway electrification, India’s trade deals, the end of Naxalism and more. He called upon the nation to embrace 'Shakti Ki Saptadhara'.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

August 15th, 06:50 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும், இல்லமும் மூவர்ணக் கொடியின் உணர்வாலும் புதிய தீர்மானங்களாலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

August 15th, 06:45 am

செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் உறுதியுடன் 2047-க்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை அடைவது குறித்த தனது கனவை எடுத்துரைத்தார். 'சாந்தி' (SHANTI) சட்டம், ரயில்வே மின்மயமாக்கல், இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், நக்சலிசத்தின் முடிவு உள்ளிட்ட முக்கிய முன்னெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 'சக்தி கி சப்ததாரா' (சக்தியின் ஏழு நீரோடைகள்) எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மைசூரில் சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு இளைஞர் மையம் – விவேகானந்தர் நினைவுத்தூன் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 01st, 04:53 pm

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம் - விவேக ஸ்மரகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அந்நகரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரிக்குத் தனது வணக்கத்தைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

August 01st, 04:00 pm

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம் - விவேக ஸ்மரகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அந்நகரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரிக்குத் தனது வணக்கத்தைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.

Our guiding spirit is - Grow More, Achieve More: PM Modi at the community programme in Melbourne, Australia

July 09th, 03:22 pm

PM Modi and Australian PM Anthony Albanese participated in a community programme of the Indian diaspora in Melbourne. In his address, PM Modi elaborated on the rapid progress taking place in India and expressed appreciation for the contribution of the Indian diaspora in Australia to the bilateral relationship, describing them as a living bridge between the two countries.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்

July 09th, 03:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.07.2026) மெல்போர்னில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். ஒரு சிறப்பு நிகழ்வாக, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

Skyroot’s Infinity Campus is a reflection of India’s new vision, innovation and the power of our youth: PM Modi

November 27th, 11:01 am

PM Modi inaugurated Skyroot’s Infinity Campus in Hyderabad, extending his best wishes to the founders Pawan Kumar Chandana and Naga Bharath Daka. Lauding the Gen-Z generation, he remarked that they have taken full advantage of the space sector opened by the government. The PM highlighted that over the past decade, a new wave of startups has emerged across perse sectors and called upon everyone to make the 21st century the century of India.

ஐதராபாதில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

November 27th, 11:00 am

தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (27.11.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், விண்வெளித்துறையில் நாடு இன்று முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பைக் காண்கிறது என்றும், தனியார் துறை பங்கேற்பின் மூலம் இந்தியாவின் விண்வெளிச் சூழல் அமைப்பு மாபெரும் பாய்ச்சல் வேகத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டில் பிரதமரின் உரை

November 03rd, 11:00 am

இன்றைய நிகழ்வு அறிவியலுடன் தொடர்புடையது, ஆனால் முதலில் நான் கிரிக்கெட்டில் இந்தியாவின் அற்புதமான வெற்றியைப் பற்றிப் பேசுகிறேன். முழு இந்தியாவும் அதன் கிரிக்கெட் அணியின் வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. இது இந்தியாவின் முதல் மகளிர் உலகக் கோப்பை. நமது மகளிர் கிரிக்கெட் அணியை நான் வாழ்த்துகிறேன். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் வெற்றி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை ஊக்குவிக்கும்.

வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் 2025 மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

November 03rd, 10:30 am

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற, வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03 நவம்பர் 2025) உரையாற்றினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இதர சிறப்பு விருந்தினர்களை பிரதமர் வரவேற்றார்.

தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 04th, 05:35 pm

நமது பாரம்பரியத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை இயற்கையாகவே உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தின் மகத்தான சக்தியாகவும் உள்ளனர். ஆசீர்வதிப்பதற்கு ஆசிரியர்களை எழுந்து நிற்கச் செய்வது தவறாகும். இத்தகைய பாவத்தை செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுடன் நிச்சயமாக உரையாட விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை உங்கள் அனைவரையும் சந்திப்பது சிறப்பான அனுபவமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே உரித்தான ஒரு கதையைக் கொண்டு இருப்பீர்கள். ஏனெனில் அப்படி இல்லாமல் இந்த நிலையை நீங்கள் அடைந்திருக்க மாட்டீர்கள். அந்தக் கதைகள் அனைத்தையும் அறிவதற்கு போதிய நேரத்தைக் கண்டறிவது சிரமமாகும். ஆனால், உங்களிடமிருந்து என்னால் கற்றுக் கொள்ள முடிவது குறைவாக இருந்தாலும் அது உண்மையில் ஊக்கமளிப்பதாக இருக்கும். அதற்காக உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன். இந்த தேசிய விருதைப் பெற்றிருப்பது முடிவல்ல. இந்த விருதுக்குப் பின் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். இதன் பொருள், உங்களைப் பற்றிய கவனம், குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்திருக்கும். இதற்கு முன்பு, உங்களின் செல்வாக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டு இருந்திருக்கும். ஆனால், இந்த அங்கீகாரத்திற்குப் பின், அது மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியடையும். இது தொடக்கம் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருப்பது எதுவாக இருந்தாலும் சாத்தியமான வரை நீங்கள் மாணவர்களுடன் அதனை பகிர வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் போது தான், உங்களின் மனதிருப்தி உணர்வு அதிகரிக்கும். இந்தத் திசையில் நீங்கள் தொடர்ந்து பாடுபடவேண்டும். இந்த விருதுக்கான உங்களின் தெரிவு, உங்களின் கடின உழைப்பிற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். அதனால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. ஒரு ஆசிரியர் என்பவர் நிகழ்காலத்திற்கு மட்டுமானவர் அல்ல, அவர் நாட்டின் எதிர்கால தலைமுறையையும் கட்டமைக்கிறார், எதிர்காலத்தை மெருகூட்டுகிறார். நாட்டிற்கான சேவையில் மற்ற எதையும் விட, இது சற்றும் குறைவானதல்ல என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற கோடிக்கணக்கான ஆசிரியர்கள் இதே அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நாட்டுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வருவதற்கான வாய்ப்பை அனைவரும் பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை பலர், முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது சிலர் கவனம் செலுத்தாமல் கூட இருந்திருக்கலாம். இத்தகைய திறன்களுடன் ஏராளமானவர்கள் உள்ளனர். அனைவரின் கூட்டு முயற்சிகளால் தான் நாடு தொடர்ந்து வளர்ச்சியடைவதையும், புதிய தலைமுறைகள் தொடர்ந்து வளர்வதையும் உறுதி செய்ய முடிகிறது. நாட்டுக்காக, நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரும் இதற்கு பங்களிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார்

September 04th, 05:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார். ஆசிரியர்களை கௌரவிப்பது வெறும் சடங்கல்ல என்றும் அவர்கள் தங்களின் வாழ்நாளையே அர்பணித்துள்ளதை அங்கீகரிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவர்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமே இந்த விருதுக்கான தேர்வு என்று அவர் கூறினார்.

18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்

August 12th, 04:34 pm

64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரகாசிக்கும் நட்சத்திரங்களுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்விற்காக, இந்தியாவிற்கு வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவில் பாரம்பரியம் புதுமைகளை சந்திக்கிறது, ஆன்மீகம் அறிவியலை சந்திக்கிறது, ஆர்வம் படைப்பாற்றலை சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தை கவனித்து முக்கிய கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். உதாரணமாக, 5 ஆம் நூற்றாண்டில், ஆர்யபட்டா பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தார். பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறியவரும் அவரே. உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்!

18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

August 12th, 04:33 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், 64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைவதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், சர்வதேச ஒலிம்பியாட் நிகழ்விற்காக இந்தியா வந்துள்ளவர்களை அன்புடன் வரவேற்றார். இந்தியாவில், பாரம்பரியம் புதுமையையும், ஆன்மீகம் அறிவியலையும், ஆர்வம் படைப்பாற்றலையும் சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தைக் கவனித்து முக்கிய கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என்று திரு. மோடி கூறினார். 5 ஆம் நூற்றாண்டில் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்து, பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறிய ஆர்யபட்டாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்! என்று பிரதமர் குறிப்பிட்டார்.