மத்தியப் பிரதேசத்திற்கு நாளை (மே 31 )பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

May 30th, 11:15 am

லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழாவையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (மே 31) மத்தியப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார். போபாலில் காலை 11.15 மணியளவில் லோகமாதா தேவி அஹில்யா பாய் மகளிர் அதிகாரமளித்தல் மகாசம்மேளனத்தில் அவர் பங்கேற்கிறார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.