உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2024 பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்
June 23rd, 02:13 pm
அப்போது களப்பயிற்சி, அமைச்சகங்களில் தாங்கள் பெற்ற அனுபவம் குறித்து இளம் பயிற்சி அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். அந்த அதிகாரிகளிடையே உரையாற்றிய பிரதமர், இரண்டு ஆண்டுகால கள அனுபவம், நிர்வாக கற்றலுக்குப் பிறகு அவர்கள், தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதாகவும் அவர்களுடைய முடிவுகள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை மட்டுமின்றி, கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று தெரிவித்தார். ஒருங்கிணைப்பு, உணர்வுப்பூர்வமான அணுகுமுறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் வாழ்க்கைச் சூழல்களை கையாள்வதன் மூலம், பொது சேவையில் உண்மையான சோதனை தொடங்குவதாக அவர் கூறினார்.உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பின் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
July 11th, 07:28 pm
பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2022-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த 181 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் கலந்துரையாடினார்.