அசாம் தினத்தையொட்டி அசாம் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 02nd, 03:56 pm
அசாம் தினத்தையொட்டி அசாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஸ்வர்கதேயோ சாவோலுங் சுகபா-வின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசாம் மாநில வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய மற்றும் அசாம் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.