Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament

July 07th, 03:15 pm

Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.

இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

July 07th, 03:00 pm

ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.

மலேசியப் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்

February 08th, 11:19 am

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (08.02.226) மலேசியாவில், மலேசிய பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிம் சம்பிரதாய வரவேற்பு அளித்தார். அதன் பிறகு, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையிலான இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர்.

Let us work together to realize the dream of a prosperous Malaysia and a developed India: PM Modi at India - Malaysia Joint Press Meet

February 08th, 08:35 am

In the joint press meet with Malaysian PM Anwar Ibrahim, PM Modi highlighted his first foreign visit of 2026 to Malaysia. Welcoming the deepening ties between India and Malaysia across sectors, the PM emphasised that these steps will make life easier for citizens of both countries. He reiterated his commitment to development, peace and stability in the entire Indo-Pacific region along with ASEAN.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா - மலேசியா கூட்டு அறிக்கை

February 08th, 08:30 am

மலேசியப் பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 பிப்ரவரி 7 முதல் 8 வரை மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக தொடர்புகளின் அடிப்படையில் ஆழமான வேரூன்றிய நட்பு, மக்களுக்கு இடையேயான நீடித்த உறவுகளைப் பிரதிபலித்தது. இந்தியா-மலேசியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து விரிவுபடுத்துவதற்கான இரு தலைவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.

India wants to take relationship with Malaysia to a new level: PM Modi at India and Malaysia delegation-level talks

February 08th, 08:20 am

During delegation-level talks with Malaysian PM Anwar Ibrahim, PM Modi expressed his happiness at receiving a warm welcome in Malaysia. He highlighted that India–Malaysia cooperation is deepening across every sector, from agriculture and manufacturing to clean energy and semiconductors. He noted that, as maritime neighbours, India and Malaysia must realise the full potential of their relationship.

22வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

October 25th, 09:48 am

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அக்டோபர் 26, 2025 அன்று நடைபெறும் 22வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் மெய்நிகர் முறையில் கலந்து கொள்வார். நமது கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஆசியான்-இந்தியா உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆசியான் தலைவர்களுடன் பிரதமர் மோடி கூட்டாக மதிப்பாய்வு செய்வார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆசியான் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதற்காக மலேசிய பிரதமருக்கு வாழ்த்து

October 23rd, 10:55 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமுடன் உரையாடினார். அப்போது ஆசியான் அமைப்புத் தலைமைத்துவத்தை மலேசியா ஏற்றுள்ளதற்காக பிரதமர் திரு இப்ராஹிமிற்கு வாழ்த்து தெரிவித்தார். மலேசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் ஆசியான் தொடர்பான மாநாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவர் வாழ்த்து கூறினார்.

பிலிப்பைன்ஸ் அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமரின் கருத்துகள்

August 05th, 03:45 pm

இந்தியா வந்துள்ள தங்களுக்கும் தங்களது பிரதிநிதிகள் குழுவையும் நான் வரவேற்கிறேன். இன்று இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையேயான உறவுகளை நாம் உத்திசார் கூட்டாண்மையாக மேம்படுத்த வேண்டும். பாதுகாப்புத் துறையில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சரியான தருணம் இது. கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து இன்று நாம் எடுக்கும் முடிவு, மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.

இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 19th, 06:09 am

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டின் இடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியானில் நடைபெற்ற 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 11th, 08:15 am

ஆசியானின் ஒற்றுமையையும் மையத்தன்மையையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டத்திற்கும் குவாட் ஒத்துழைப்புக்கும் ஆசியான் முக்கியமானது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் பெருங்கடல் முன்முயற்சி, இந்தோ-பசிஃபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கிடையே முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிஃபிக் என்பது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது.

19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

October 11th, 08:10 am

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் உள்ள வியன்டியானில் 2024, அக்டோபர் 11 அன்று நடைபெற்ற 19 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.

21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 10th, 08:37 pm

உங்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளுக்கு நன்றி. இந்தியா - ஆசியான் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நலன், பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.

லாவோஸில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய நிறைவுரையின் தமிழாக்கம்

October 10th, 08:13 pm

இன்று நாம் நடத்திய நேர்மறையான விவாதங்களுக்கும், நீங்கள் வழங்கிய மதிப்புமிக்க ஆலோசனைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் இடையே நியூசிலாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

October 10th, 07:18 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் மேதகு திரு. கிறிஸ்டோபர் லக்சனும் வியன்டியான் நகரில் நடைபெற்று வரும் ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டின் இடையே சந்தித்துப் பேசினர். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமரை பிரதமர் சந்தித்தார்

October 10th, 07:12 pm

லாவோஸில் நடைபெறும் ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டின் இடையே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜப்பான் பிரதமர் மேதகு திரு. ஷிகேரு இஷிபாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆசியான் - இந்தியா கூட்டறிக்கை

October 10th, 05:42 pm

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) மற்றும் இந்தியா அமைப்பின் உறுப்பு நாடுகளான நாம், 2024 அக்டோபர் 10 அன்று லாவோஸ் நாட்டின் வியன்டியானில் 21-வது ஆசியான் - இந்தியா உச்சிமாநாட்டின் போது வெளியிட்ட கூட்டறிக்கை.

லாவோ ஜனநாயக குடியரசின் வியன்டியான் நகரில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

October 10th, 02:35 pm

10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையை நான் அறிவித்தேன். கடந்த பத்தாண்டுகளில் இந்த முன்முயற்சி இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளுக்கு புத்துயிர் அளித்து, அவற்றுக்கு புதிய ஆற்றல், திசை மற்றும் உத்வேகத்தை அளித்துள்ளது.

லாவோ ஜனநாயக குடியரசின் வியன்டியான் நகரில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

October 10th, 02:30 pm

இன்று, ஆசியான் குடும்பத்துடன் பதினோராவது முறையாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் பெருமை அடைகிறேன்.

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியான் பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

October 10th, 07:00 am

21-வது ஆசியான் – இந்தியா மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு சோனெக்சே சிபன்டோன் விடுத்த அழைப்பின் பேரில் லாவோ ஜனநாயக குடியரசின் வியன்டியானுக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று நான் தொடங்குகிறேன்.