22வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

October 25th, 09:48 am

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அக்டோபர் 26, 2025 அன்று நடைபெறும் 22வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் மெய்நிகர் முறையில் கலந்து கொள்வார். நமது கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஆசியான்-இந்தியா உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆசியான் தலைவர்களுடன் பிரதமர் மோடி கூட்டாக மதிப்பாய்வு செய்வார்.