Prime Minister condoles the loss of lives due to a mishap in the Anjaw district of Arunachal Pradesh

December 11th, 06:39 pm

Prime Minister Shri Narendra Modi today condoled the loss of lives due to a mishap in the Anjaw district of Arunachal Pradesh. He announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased and Rs. 50,000 to the injured.

Prime Minister interacts with traders and entrepreneurs in Itanagar

September 22nd, 03:43 pm

PM Modi had an interaction with the traders and entrepreneurs in Itanagar, Arunachal Pradesh. Stating that they expressed their appreciation for the GST reforms and the launch of the GST Bachat Utsav, the PM highlighted how these initiatives will benefit key sectors. He emphasised quality standards and encouraged buying Made in India products.

பிரதமர் இட்டாநகரில் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளை சந்தித்துப் பேசினார்

September 22nd, 03:39 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இட்டாநகரில் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் பல்வேறு வகையான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்களுக்கு 'இது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று பெருமையுடன் கூறுவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் வழங்கப்பட்டன. இந்த சுவரொட்டிகளை அவர்கள் தங்கள் கடைகளில் ஆர்வத்துடன் காட்சிப்படுத்துவதாகக் கூறினர், என்று திரு மோடி கூறினார்.

Arunachal Pradesh is a confluence of peace & culture and the pride of India: PM Modi in Itanagar

September 22nd, 11:36 am

PM Modi launched development projects worth over ₹5,100 crore in Itanagar, Arunachal Pradesh. He highlighted new hydropower projects, improved connectivity, including Hollongi Airport and initiatives in health, education and women’s hostels. The PM praised the state’s patriotism and growing tourism, reaffirming his government’s commitment to rapid and inclusive development. He also noted how lower GST rates have sparked a GST Savings Festival, warmly welcomed by traders and retailers.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் ரூ.5,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்றத் திட்டங்களை தொடங்கிவைத்தார்

September 22nd, 11:00 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் 5,100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சர்வ வல்லமை கொண்ட டோனி போலோவுக்கு மரியாதை செலுத்தி, அனைவருக்கும் ஆசி கிடைக்க பிரார்த்தனை செய்தார்.

செப்டம்பர் 22-ம் தேதி பிரதமர் அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

September 21st, 09:54 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2025 செப்டம்பர் 22) அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இட்டாநகரில் ₹5,100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.

Bharat Ratna for Bhupen Da reflects our government's commitment to the North East: PM Modi in Guwahati, Assam

September 13th, 08:57 pm

PM Modi addressed the 100th birth anniversary of Bharat Ratna Dr. Bhupen Hazarika in Guwahati, Assam, calling it a remarkable day and a great privilege to be part of the celebrations. The PM shared, Bhupen Da, lovingly known as “Shudha Kantho,” gave voice to India’s unity, dreams and compassion of Mother India. “Bhupen Da’s entire life was dedicated to the nation’s goals,” PM Modi remarked, affirming the centenary year as a true tribute to his legacy.

PM Modi addresses the 100th birth anniversary celebrations of Bharat Ratna Dr. Bhupen Hazarika in Guwahati, Assam

September 13th, 05:15 pm

PM Modi addressed the 100th birth anniversary of Bharat Ratna Dr. Bhupen Hazarika in Guwahati, Assam, calling it a remarkable day and a great privilege to be part of the celebrations. The PM shared, Bhupen Da, lovingly known as “Shudha Kantho,” gave voice to India’s unity, dreams and compassion of Mother India. “Bhupen Da’s entire life was dedicated to the nation’s goals,” PM Modi remarked, affirming the centenary year as a true tribute to his legacy.

அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் ரூ.8146 கோடி ஒதுக்கீட்டில் 700 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்உற்பத்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

August 12th, 03:29 pm

அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் ரூ.8146 கோடி ஒதுக்கீட்டில் 700 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்உற்பத்தி திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (12 ஆகஸ்ட் 2025) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை 72 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 23rd, 11:00 am

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் பல்லா அவர்களே, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பேமா காண்டு அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சஹா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் அவர்களே, நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ அவர்களே, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, அனைத்து தொழில் துறை தலைவர்களே, முதலீட்டாளர்களே, பெண்களே, தாய்மார்களே வணக்கம்!

பிரதமர் திரு. நரேந்திர மோடி, எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார்

May 23rd, 10:30 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் வளர்ச்சிப் பணிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 22nd, 12:00 pm

ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதல்வர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, முன்னாள் முதல்வர் சகோதரி வசுந்தரா ராஜே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி அவர்களே, பிரேம் சந்த் அவர்களே, ராஜஸ்தான் அரசின் பிற அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் மதன் ரத்தோர் அவர்களே, இதர நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, என் அன்பான சகோதர, சகோதரிகளே.

ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

May 22nd, 11:30 am

ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பெருமளவில் திரண்டிருந்தோரை வரவேற்றார். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து இணையதளம் வழியாக குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றவர்களையும் வரவேற்றார். பல ஆளுநர்கள், முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பையும் அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வில் இணைந்த அனைத்து பிரமுகர்களுக்கும், குடிமக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

நியூஸ் 18 தொலைக்காட்சி ஏற்பாடு செய்த எழுச்சிமிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

April 08th, 08:30 pm

இந்த உச்சிமாநாட்டின் மூலம் நம் நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக நியூஸ் 18 நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், விவேகானந்தர் பிறந்த தினத்தன்று, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்களின் கனவுகளை மனவுறுதியின் வலிமையையும், வளர்ந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான அவர்களது ஆர்வத்தையும் காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த அமிர்த காலம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தையும், மன வலிமையையும் அளிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சிமிகு இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

April 08th, 08:15 pm

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சி மிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைவர்கள் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து நிலைகளிலும் அது குறித்த தொடர் விவாதங்கள் சிறந்த சிந்தனைகளை வளர்க்க உதவும் என்று கூறினார். இது அமிர்த கால தலைமுறையினருக்கு உற்சாகமூட்டும் வகையிலும், வழிகாட்டியாகவும், திகழும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த உச்சி மாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

அருணாச்சலப்பிரதேச மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

February 20th, 04:33 pm

அருணாச்சலப்பிரதேச மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் செறிவான பாரம்பரியங்களுக்காகவும் இயற்கையோடு நெருக்கமான பிணைப்புக்காகவும் பெயர்பெற்ற மாநிலம் ஆகும் என திரு மோடி கூறியுள்ளார். அருணாச்சலப்பிரதேசம் தொடர்ந்து செழிப்படையட்டும் என்றும், அதன் முன்னேற்றப் பயணமும் நல்லிணக்கமும் வரும் ஆண்டுகளுக்கும் தொடரட்டும் என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சோன்மார்க் சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 13th, 12:30 pm

துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு நிதின் கட்கரி அவர்களே, திரு ஜிதேந்திர சிங் அவர்களே, அஜய் தம்தா அவர்களே, துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரி அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா அவர்களே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே.

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்

January 13th, 12:15 pm

ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சவால்கள் இருந்த போதிலும், உறுதியான அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து பணிகளை நிறைவேற்றியதற்காக அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi

November 15th, 11:20 am

PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.

பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

November 15th, 11:00 am

பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.