
India and the Philippines have decided to elevate their ties to a Strategic Partnership: PM Modi
August 05th, 11:06 am
PM Modi and Philippines President Marcos Jr. addressed a joint press meet in New Delhi, marking 75 years of diplomatic ties. PM Modi announced the decision to elevate the relationship to a Strategic Partnership with a detailed action plan. Key areas of focus included defense, maritime cooperation, space, AI research, trade, and cultural exchange. He welcomed visa-free entry for Indians and promised full support for the Philippines' ASEAN chairmanship next year.
We will reduce terrorists to dust, their handlers will face unimaginable punishment: PM Modi in Lok Sabha
July 29th, 05:32 pm
Prime Minister Narendra Modi, speaking in the Lok Sabha during the special discussion on Operation Sindoor, strongly defended the military action taken in response to the April 22 terror attack in Pahalgam. He took sharp aim at the Congress, accusing it of undermining the morale of the armed forces. “India received support from across the world, but it is unfortunate that the Congress could not stand with the bravery of our soldiers,” the Prime Minister said.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த மக்களவை சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் விஜய் உத்சவ் (வெற்றி விழா) இந்திய ஆயுதப் படைகளின் வீரத்திற்கும் வலிமைக்கும் ஒரு சான்றாகும்: பிரதமர்
July 29th, 05:00 pm
பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான, தீர்க்கமான 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். அவையின் கூட்டத்தொடர் தொடக்கத்தில் ஊடகவியலாளர்களுடனான தமது உரையாடலை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த அமர்வு இந்தியாவின் வெற்றியின் கொண்டாட்டமாகவும், இந்தியாவின் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறினார்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035
July 24th, 07:12 pm
இந்தியா மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள், ஜூலை 24, 2025 அன்று லண்டனில் நடந்த சந்திப்பின் போது, புதிய இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035-ஐ அங்கீகரித்தனர். இது புத்துயிர் பெற்ற கூட்டாண்மையின் முழு திறனையும் வெளிக்கொணர்வதற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சிய மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒப்பந்தம், பரஸ்பர வளர்ச்சி, செழிப்பு மற்றும் விரைவான உலகளாவிய மாற்றத்தின் போது ஒரு வளமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்தை வடிவமைப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.இங்கிலாந்து பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் உரை
July 24th, 04:20 pm
முதலில், பிரதமர் ஸ்டார்மரின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பல வருட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு
July 09th, 06:02 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் 4-வது கட்டமாக பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்றடைந்தார். அங்குள்ள அல்வோராடா அரண்மனையில் அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் திரு லூலா பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்றார்.பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
July 08th, 08:30 pm
ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம்.ரியோ டி ஜெனிரோ பிரகடனம் – வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த ஆளுகைக்கான உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
July 07th, 06:00 am
அனைத்து நாடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த நிர்வாகத்திற்கான உலகின் தென்பகுதியில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் , ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.பிரிக்ஸ் உச்சிமாநாடு: உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் குறித்த பிரதமரின் உரை
July 06th, 09:41 pm
பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசில் தலைமையின் கீழ், பிரிக்ஸ் உச்சி மாநாடு புதிய உத்வேகத்தையும் எழுச்சியையும் பெற்றுள்ளது. இதற்காக அந்நாட்டு அதிபரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டுகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இந்தோனேசியா சேர்க்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோவுக்கு இந்தியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை
July 06th, 09:40 pm
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
July 06th, 09:39 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 - 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார கோரிக்கைகளை வலியுறுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், வளர்ச்சி விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்தினார்கள். பிரேசில் அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்காகவும் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.டிரினிடாட் & டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமரின் உரை
July 04th, 09:30 pm
1.4 பில்லியன் இந்திய மக்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு நான் பார்வையிட்ட கானா மக்களிடமிருந்தும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்
July 04th, 09:00 pm
டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் திரு வேட் மார்க், திரு இ. ஜக்தியோ சிங் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.Prime Minister Narendra Modi to visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil, and Namibia
June 27th, 10:03 pm
PM Modi will visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil and Namibia from July 02-09, 2025. In Ghana, Trinidad & Tobago and Argentina, the PM will hold talks with their Presidents to review the strong bilateral partnership. In Brazil, the PM will attend the 17th BRICS Summit 2025 and also hold several bilateral meetings. In Namibia, PM Modi will hold talks with the President of Namibia and deliver an address at the Parliament of Namibia.இந்தியா - குரோஷியா தலைவர்களின் அறிக்கை
June 19th, 06:06 pm
குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஜூன் 18 அன்று குரோஷியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்ட பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.இந்திய - குரேஷிய குடியரசின் பிரதமர்கள் சந்திப்பு
June 18th, 11:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜாக்ரெப் நகரில் குரோஷிய குடியரசின் பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கை சந்தித்து பேசினார். இந்தியப் பிரதமர் குரேஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க பான்ஸ்கி ட்வோரி அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு அந்நாட்டு பிரதமர் பிளென்கோவிக் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார்.எரிசக்தி பாதுகாப்பு குறித்த ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை (ஜூன் 17, 2025)
June 18th, 11:15 am
ஜி-7 உச்சிமாநாட்டிற்கு எங்களை அழைத்ததற்கும், சிறந்த வரவேற்புக்கும் கனடா பிரதமர் கார்னிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி-7 கூட்டமைப்பின் 50 ஆண்டு நிறைவையொட்டி, வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் உரை
June 18th, 11:13 am
கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் வெளிநடவடிக்கை அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். 'மாறிவரும் உலகில் எரிசக்தி பாதுகாப்பு: பன்முகத்தன்மை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், ஜி7-ன் 50 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்தியா-கனடா இடையே மக்களுக்கிடையேயான வலுவான தொடர்பை மேம்படுத்துவதற்காக இருநாட்டு பிரதமர்கள் திரு மோடி, திரு கார்னி சந்திப்பு
June 18th, 08:02 am
ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.