சர்தார் ச்ரோவர் அணைக்கட்டை நாட்டிற்கு அர்பணிக்க உள்ள பிரதமர் குஜராத்தில் இரு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவார்
September 16th, 02:19 pm
செப்டெம்பர் மாதம் 17ஆம் தேதி, குஜராத்தில் கேவாடியாவில், சர்தார் ச்ரோவர் அணைக்கட்டை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்பணிக்க உள்ளார். நர்மதா நதியில் உள்ள நீரை காலவாய் மற்றும் பைலைன் மூலமாக குஜராத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த திட்டம் வகை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் நீர்பாசனத்தின் மூலம் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் இதன் மூலம் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ள குடிநீரினால் சுமார் 4 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.