கூட்டறிக்கை: இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு முறை குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
December 22nd, 07:46 pm
குவைத் நாட்டின் அமீரான ஷேக் மெஷல் திரு.அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 21, 2024 அன்று குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் மேதகு அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் 'கௌரவ விருந்தினராகக்' கலந்து கொண்டார்.குவைத் அமீரை பிரதமர் சந்தித்தார்
December 22nd, 05:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவைச் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பயான் அரண்மனையை வந்தடைந்த பிரதமருக்கு , குவைத் பிரதமர் அஹ்மத் அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார்.அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்பு
December 21st, 10:24 pm
குவைத் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிரம்மாண்டமான தொடக்க விழாவில் குவைத் பிரதமர் மேதகு அமீர், பட்டத்து இளவரசர் மற்றும் மேதகு குவைத் பிரதமர் ஆகியோருடன் அவர் இணைந்து கொண்டார். குவைத் தலைவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.குவைத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 21st, 06:34 pm
நான் இரண்டரை மணி நேரத்திற்கு முன்புதான் குவைத் வந்தேன். நான் இங்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து, சுற்றிலும் ஒரு தனித்துவமான சொந்தம் மற்றும் அரவணைப்பை உணர்ந்தேன். நீங்கள் அனைவரும் பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, ஒரு சிறிய இந்துஸ்தான் எனக்கு முன்னால் உயிர் பெற்று வந்ததைப் போல உணர்கிறேன்.குவைத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
December 21st, 06:30 pm
குவைத் நகரில் உள்ள ஷேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' என்ற சிறப்பு நிகழ்ச்சியில் திரண்டிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குவைத்தில் உள்ள பல்வேறு சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாட்டினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.குவைத் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
December 21st, 09:21 am
குவைத் அரசின் அமீர் திரு ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பை ஏற்று நான் குவைத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்குகிறேன்.