ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 29th, 11:01 am
மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, மத்திய இணையமைச்சர்கள் திரு ஜிதேந்திர சிங் அவர்களே, திரு ஜெயந்த் சௌத்ரி அவர்களே, திரு சுகந்தா மஜூம்தார் அவர்களே, கல்வியாளர்களே, அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களே, சிறப்பு விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்.ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
April 29th, 11:00 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களிடையே உரையாற்றிய பிரதமர் ஒய்.யு.ஜி.எம் என்பது பங்குதாரர்களின் சங்கமம் என்றார்.ஏப்ரல் 29 அன்று நடைபெறும் ஒய்யூஜிஎம் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
April 28th, 07:07 pm
ஏப்ரல் 29 அன்று காலை 11 மணியளவில் புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் ஒய்யூஜிஎம் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்பவர்களிடையே அவர் உரையாற்றுவார். ஒய்யூஜிஎம் (சமஸ்கிருதத்தில் சங்கமம் என்று பொருள்) என்பது அரசு, கல்வி, தொழில்துறை மற்றும் புத்தாக்க சூழலியல் சார்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் முதல் வகையான உத்திசார் மாநாடு ஆகும். வாத்வானி அறக்கட்டளை மற்றும் அரசு நிறுவனங்களின் கூட்டு முதலீட்டுடன் சுமார் 1,400 கோடி ரூபாய் கூட்டுத் திட்டத்தால் இயக்கப்படும் இந்தியாவின் புத்தாக்க பயணத்திற்கு இது பங்களிக்கும்.பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பிரதமர் ஆற்றிய உரை
March 05th, 01:35 pm
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் வாழ்த்துக்கள். மக்கள் சக்தி, பொருளாதாரம், புத்தாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்தல்- இது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதற்கான வழி வகைகளை வரையறைக்கும் கருப்பொருளாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருப்பதை நீங்கள் காண முடியும். எனவே, இந்த பட்ஜெட் இந்தியாவின் எதிர்காலத்திற்கான வரைபடமாக உருவெடுத்துள்ளது. மக்கள் சக்தி ,பொருளாதாரம் மற்றும் புத்தாக்கப் படைப்புகளுக்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறதோ அதே அளவு முன்னுரிமை முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அளித்து வருகிறோம். திறன் மேம்பாடு, நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே, தற்போது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில், இந்தப் பிரிவுகளில் நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும். இதற்காக, அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். ஏனெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அவசியமாகும். அதே நேரத்தில், இது ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையாகும்.வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் – மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
March 05th, 01:30 pm
பட்ஜெட்டுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் முதலீடு என்ற இணையவழிக் கருத்தரங்கின் கருப்பொருளின் முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு பட்ஜெட் இந்தக் கருத்தை அதிக அளவில் பிரதிபலிக்கிறது என்றும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான திட்டமாக இது செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு, தொழில்கள், மனித சக்தி, பொருளாதாரம், புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் முதலீடுகளுக்கு சமமான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திறன் மேம்பாடு மற்றும் திறமை ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய திரு மோடி, அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவைப்படுவதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடு செய்ய அனைத்து பங்குதாரர்களும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இது நாட்டின் பொருளாதார வெற்றிக்கு இன்றியமையாதது மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
November 25th, 08:42 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, ஒரே நாடு, ஒரே சந்தா என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் எளிமையான, பயனருக்கு உகந்த மற்றும் முழுமையான டிஜிட்டல் செயல்முறை மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் கல்விப் புலம் சார்ந்த ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி இதழ்களைப் படிக்க முடியும்.இது அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கான ஒரே நாடு ஒரு சந்தா வசதியாக இருக்கும்.உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
September 11th, 12:00 pm
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஜிதின் பிரசாதா அவர்களே, உலகளாவிய குறைக்கடத்தி தொழில்துறையுடன் தொடர்புடைய அனைத்து ஜாம்பவான்களே, கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு உலகின் அனைத்து கூட்டாளர்களே, பிற புகழ்பெற்ற விருந்தினர்களே, தாய்மார்களே, அனைவருக்கும் வணக்கம்!உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் செமிகான் இந்தியா 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
September 11th, 11:30 am
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா கண்காட்சி அரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செமிகான் இந்தியா 2024-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை திரு மோடி பார்வையிட்டார். செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாடு, இந்தியாவை குறைகடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான இந்தியாவின் குறைக்கடத்தி உத்தி மற்றும் கொள்கையை வெளிப்படுத்தும்.பிரதமர் தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்
September 10th, 04:43 pm
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.09.2024) 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப நிலப்பரப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மறுவடிவமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.