15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சி மாநாடு கூட்டறிக்கை: நமது அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் வளத்துக்கான கூட்டாண்மை
August 29th, 07:06 pm
ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக 2025, ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2025, ஆகஸ்ட் 29 அன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் (கான்டெய்) பிரதமர் மோடியை பிரதமர் இஷிபா வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பிரதமர்களும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாகரிக உறவுகள், பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் ஆர்வங்கள், பொதுவான உத்திசார் கண்ணோட்டம் ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியா- ஜப்பான் இடையேயான நீண்டகால நட்பை அவர்கள் நினைவு கூர்ந்தனர். கடந்த தசாப்தத்தில் இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு பிரதமர்களும் பாராட்டினர். மேலும் வரும் தசாப்தங்களில் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் வளத்தை அடைவதற்கான உத்தி மற்றும் எதிர்கால கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கபூர்வக் கலந்துரையாடலை நடத்தினர்.அரசுமுறைப் பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
August 28th, 08:40 pm
ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், 15வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறேன்.பிரதமர் மோடியை ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் சந்தித்தார்
June 04th, 04:52 pm
ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸ், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். அண்மையில் நடைபெற்ற கூட்டாட்சித் தேர்தலில் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக துணைப் பிரதமர் மார்லஸூக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.