தேசப்பிதா மகாத்மா காந்திக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
January 30th, 10:41 am
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்புள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாக விளங்கும் சுதேசி கொள்கைக்கு பாபு எப்போதும் வலுவான முக்கியத்துவம் அளித்தார் என்று திரு மோடி கூறினார். அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களைக் கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்கப்படுத்தும் என்று திரு மோடி கூறினார்.அயோத்தியில் ராம் லல்லாவின் பிரான பிரதிஷ்டை இரண்டாம் ஆண்டு விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
December 31st, 01:51 pm
அயோத்தியில் ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டையின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75-வது நினைவு நாளில் அவருக்கு பிரதமர் மரியாதை
December 15th, 08:44 am
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75-வது நினைவு நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சர்தார் படேல் தமது முழு வாழ்க்கையையும் தேசத்தை ஒன்றிணைத்து, இந்தியாவை ஒற்றுமையின் ஒற்றை இழையாகப் பின்னுவதற்கு அர்ப்பணித்ததாக அவர் கூறியுள்ளார்.Devbhoomi Uttarakhand is the heartbeat of India's spiritual life: PM Modi in Dehradun
November 09th, 01:00 pm
In his address at the Silver Jubilee Celebration of formation of Uttarakhand in Dehradun, PM Modi reflected on the remarkable journey of the past 25 years. Launching multiple development projects, the PM noted that Uttarakhand’s budget has now crossed ₹1 lakh crore. Reiterating that the true identity of Uttarakhand lies in its spiritual strength, he stated that it can establish as the “Spiritual Capital of the World”. He also praised the state government’s bold policies on significant issues.உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 09th, 12:30 pm
உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டேராடூனில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் ரூ.8140 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, தேவபூமியான உத்தராகண்ட் மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.உத்தராகண்டின் 25-ம் ஆண்டு நிறுவன தினம் - அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
November 09th, 09:05 am
உத்தராகண்ட் மாநிலம் நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு நிறைவையொட்டி, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் இந்த தெய்வீக பூமி, சுற்றுலாவோடு அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.ராம் விலாஸ் பாஸ்வானின் புண்ணிய திதியையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்
October 08th, 10:20 am
பீகார் மாநிலத்தின் பிரபல அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானின் புண்ணிய திதியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்
September 26th, 08:51 am
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் 11 ஆண்டுகள் – பிரதமர் மகிழ்ச்சி
September 25th, 01:01 pm
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் 11-ம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் பொருளாதார சூழல், தொழில்முனைவோர் அமைப்பு ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இயக்கத்தின் தாக்கம் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் தொழில்முனைவோருக்கு இந்த இயக்கத்தின் மூலம் உத்வேகம் அளிக்கப்பட்டதாகவும் அதன் வாயிலாக உலகளாவிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரை திருப்புமுனையை ஏற்படுத்தியது- பிரதமர்
September 11th, 08:49 am
சுவாமி விவேகானந்தரின் 132-வது பிறந்த தினத்தில் நடைபெறும் புனிதமான நிகழ்வில் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய தருணமாக அமைந்த என்று தெரிவித்துள்ளார். இந்த சிறப்புவாய்ந்த தருணம் நல்லிணக்கம் மற்றும் உலக அளவிலான சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நமது வரலாற்றில் மிகவும் போற்றத்தக்கதும், உத்வேகம் அளிக்கக் கூடிய வகையிலும் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்
July 26th, 06:47 pm
மாலேவுக்கான தற்போதைய பயணத்தின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவில் 'கௌரவ விருந்தினராக' கலந்து கொண்டார். மாலத்தீவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். அதிபர் முய்சுவால் கௌரவிக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவரும் பிரதமர் மோடி ஆவார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
May 21st, 08:34 am
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் வாழ்த்து
May 16th, 10:13 am
சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவை இன்று (16.05.2025) கொண்டாடும் அம்மாநில மக்களுக்கு, சிக்கிம் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு, சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50-வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் நிலையில், இந்த தினம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். சிக்கிம் மாநிலம் அமைதியான அழகான, வளமான கலாச்சார மரபுகளுடன் கடினமாக உழைக்கும் மக்களையும் கொண்ட மாநிலமாக உள்ளது என திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.முத்ரா திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தின் விளைவுகளுக்குப் பிரதமர் பாராட்டு
April 08th, 09:08 am
பிரதமரின் முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவையொட்டி அதன் பயனாளிகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
March 30th, 11:42 am
மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா நினைவு தினமான இன்று அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.புதுதில்லியில் நாளை (2025 பிப்ரவரி 28) ஜஹான்-இ-குஸ்ருவ் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
February 27th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நாளை (பிப்ரவரி 28) இரவு 7:30 மணியளவில் மாபெரும் சூஃபி இசை விழாவான ஜஹான்-இ-குஸ்ரு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
January 30th, 09:06 am
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்திய திரு மோடி, அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ளார்.அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அனைவருக்கும் பிரதமர்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
January 11th, 09:53 am
அயோத்தியில் குழந்தை ராமர் சிலை புனிதப்படுத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு தினமான இன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்தக் கோவில், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் சிறந்த பாரம்பரியம் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
December 15th, 09:32 am
சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினமான இன்று அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு. பட்டேலின் ஆளுமையும், பணியும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு குடிமக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் வாட்டாலில் நவம்பர் 11 அன்று நடைபெறும் ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்
November 10th, 07:09 pm
குஜராத் மாநிலம் வட்டாலில் நவம்பர் 11 அன்று காலை 11.15 மணியளவில் நடைபெறும் ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.