
ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 06th, 12:50 pm
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, முதல்வர் திரு உமர் அப்துல்லா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு ஜிதேந்திர சிங், திரு வி. சோமன்னா அவர்களே, துணை முதல்வர் திரு சுரேந்திர குமார் அவர்களே, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு சுனில் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது நண்பர் திரு ஜூகல் கிஷோர் அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே. இது வீர் ஜோராவர் சிங்கின் நிலம், இந்த நிலத்தை நான் வணங்குகிறேன்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜம்மு & காஷ்மீரில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
June 06th, 12:45 pm
ஜம்மு - காஷ்மீரின் கத்ராவில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ரூ.46,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத், தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். துணிச்சலான வீர ஜோராவர் சிங்கின் மண்ணுக்கு வணக்கம் செலுத்திய அவர், இன்றைய நிகழ்வு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் ஒரு பெரிய கொண்டாட்டம் என்று குறிப்பிட்டார். மாதா வைஷ்ணோ தேவியின் ஆசீர்வாதத்துடன், காஷ்மீர் பள்ளத்தாக்கு இப்போது இந்தியாவின் பரந்த ரயில்வே கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று திரு மோடி கூறினார். நாங்கள் எப்போதும் ஆழ்ந்த பயபக்தியுடன் அன்னை பாரதியை வணங்கி வருகிறோம், 'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்று கூறி வருகிறோம். இன்று இது நமது ரயில்வே கட்டமைப்பிலும் கூட ஒரு யதார்த்தமான நடைமுறையாகிவிட்டது என்று பிரதமர் கூறினார், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை திட்டம் வெறும் பெயரல்ல, ஜம்மு-காஷ்மீரின் புதிய வலிமையின் சின்னமாகவும், இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஒரு சான்றாகவும் உள்ளது என்று அவர் கூறினார். பிராந்தியத்தில் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டிற்கு இணங்க, அவர் செனாப் மற்றும் அஞ்ஜி ரயில் பாலங்களைத் திறந்து வைத்தார். மேலும் வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது ஜம்மு-காஷ்மீருக்குள் இணைப்பை மேம்படுத்துகிறது. கூடுதலாக, ஜம்முவில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரிக்கும் திரு. மோடி அடிக்கல் நாட்டினார், பிராந்தியத்தில் சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் வலுப்படுத்தினார், ரூ 46,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை துரிதப்படுத்தும், முன்னேற்றம் மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார். பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் இந்த புதிய சகாப்தத்திற்கு மக்களை வாழ்த்தினார்.
ஜம்மு காஷ்மீரில் ஜூன் 6 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
June 04th, 12:37 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 6 அன்று ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். அப்பகுதியில் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் செனாப் பாலத்தைத் திறந்து வைத்து, காலை 11 மணியளவில் பாலத்தைப் பார்வையிடுகிறார். அதன் பிறகு, அவர் அஞ்சி பாலத்தைப் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில் அவர் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, கத்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.