இந்தியா - குரோஷியா தலைவர்களின் அறிக்கை
June 19th, 06:06 pm
குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஜூன் 18 அன்று குரோஷியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்ட பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.இந்திய - குரேஷிய குடியரசின் பிரதமர்கள் சந்திப்பு
June 18th, 11:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜாக்ரெப் நகரில் குரோஷிய குடியரசின் பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கை சந்தித்து பேசினார். இந்தியப் பிரதமர் குரேஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க பான்ஸ்கி ட்வோரி அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு அந்நாட்டு பிரதமர் பிளென்கோவிக் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார்.குரோஷியா பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
June 18th, 09:56 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அழகான நகரமான ஜாக்ரெப்பில் எனக்குக் கிடைத்த வரவேற்பு, உற்சாகம் மற்றும் அன்பிற்காக பிரதமருக்கும், குரோஷியா அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் மோடி குரோஷியாவின் ஜாக்ரெப் நகருக்கு வருகை தருகிறார்
June 18th, 05:38 pm
பிரதமர் மோடி குரோஷியாவின் ஜாக்ரெப் நகருக்கு வந்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை. சிறப்பு மரியாதையுடன், பிரதமர் மோடியை விமான நிலையத்தில் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் அன்புடன் வரவேற்றார்.சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
June 15th, 07:00 am
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதமர் மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்
June 14th, 11:58 am
பிரதமர் மோடி ஜூன் 15-16 தேதிகளில் சைப்ரஸுக்கும், ஜூன் 16-17 தேதிகளில் ஜி-7 உச்சி மாநாட்டிற்காக கனடாவுக்கும், ஜூன் 18 அன்று குரோஷியாவுக்கும் செல்கிறார். பிரதமர் மோடி சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடூலிட்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் மற்றும் லிமாசோலில் வணிகத் தலைவர்களுடன் உரையாற்றுவார். பின்னர் கனடாவில், ஜி-7 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். குரோஷியாவில், பிரதமர் மோடி பிரதமர் பிளென்கோவிச்சுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் மற்றும் குரோஷிய அதிபர் சோரன் மிலானோவிக்கைச் சந்திப்பார்.