பிரத்யேகமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முன்முயற்சியான வந்தாராவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 04th, 04:05 pm
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பிரத்யேகமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முன்முயற்சியான வந்தாராவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கருணைமிக்க முயற்சிகளுக்காக திரு அனந்த் அம்பானி மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டிய பிரதமர், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வனஉயிரின நலனை ஊக்குவிக்கும் அதே வேளையில், விலங்குகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக வந்தாரா திகழ்கிறது என்று கூறியுள்ளார்.