மத்தியப் பிரதேச மாநிலம் அனந்த்பூர் தாமில் பிரதமர் ஆற்றிய உரை
April 11th, 03:37 pm
சுவாமி விச்சார் பூர்ண ஆனந்த்ஜி மகராஜ் அவர்களே, ஆளுநர் மங்குபாய் படேல் அவர்களே, முதலமைச்சர் மோகன் யாதவ் அவர்களே, எனது அமைச்சரவை சகாவான ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் வி.டி.சர்மா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் அவர்களே, மேடையில் குழுமியிருக்கும் இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே, தில்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்துள்ளனர். உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.மத்தியப் பிரதேச மாநிலம் அனந்த்பூர் தாமில் கூடியிருந்தவர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
April 11th, 03:26 pm
இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் உள்ள உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டம் இசாகர் வட்டத்தில் உள்ள அனந்த்பூர் தாமில் பிரதமர் இன்று பயணம் மேற்கொண்டார். குருஜி மகராஜ் கோயிலில் தரிசனமும் பூஜையும் செய்த அவர், அனந்த்பூர் தாமில் உள்ள கோயில் வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், தில்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்களை வரவேற்றார். ஸ்ரீ அனந்த்பூர் தாமிற்கு வருகை தந்த பிரதமர், குருஜி மகராஜின் ஆலயத்தில் பிரார்த்தனை செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இது அவரது இதயத்தை ஆனந்தத்தால் நிரப்பியது.உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
April 09th, 09:43 pm
உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.