Prime Minister Narendra Modi to address Post Budget Webinar on “Agriculture and Rural Transformation”
March 05th, 06:04 pm
PM Modi will address the Post Budget Webinar on the theme “Agriculture and Rural Transformation” on 6th March 2026. Under this theme, eight webinar sessions are being held covering four major sectors. Notably, the webinar will deliberate on opportunities offered by Bharat Vistaar, Amrit Sarovars for fisheries and expanding market access for products made by rural women entrepreneurs through SHE-Marts.Tamil culture is a shared heritage of the entire nation: PM Modi at Pongal Celebration in Delhi
January 14th, 11:00 am
Continuing his efforts to popularise Tamil culture across the globe, PM Modi participated and addressed the Pongal celebrations in New Delhi. The PM noted that Thirukkural contains extensive writings on agriculture and farmers and underscored that the government is working towards empowering farmers. He emphasized that the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat’ is further strengthened by festivals like Pongal.புதுதில்லி பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 14th, 10:45 am
புதுதில்லியில் இன்று (2026 ஜனவரி 14) நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். தமிழில் வாழ்த்து தெரிவித்த திரு மோடி, பொங்கல் இன்று உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். தமிழ்ச் சமூகத்தினராலும், உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றுவோராலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் சிறப்புமிக்க இந்தப் பண்டிகையை அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவர் கூறினார். தமிழர் வாழ்வில், பொங்கல் ஓர் இனிமையான அனுபவமாகும். பூமிக்கும் சூரியனுக்கும் விவசாயிகளின் உழைப்புக்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், இயற்கை, குடும்பம் மற்றும் சமூகத்தில் சமநிலையை நோக்கி நம்மை அது வழிநடத்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளும் லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு மற்றும் பிற பண்டிகைகளின் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.Prime Minister addresses the International Arya Mahasammelan 2025 in New Delhi
October 31st, 06:08 pm
PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
March 08th, 11:50 am
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே; நவ்சாரி நாடாளுமன்ற உறுப்பினரும், எனது அமைச்சரவை சகாவுமான மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்; மதிப்பிற்குரிய ஊராட்சி உறுப்பினர்கள்; மேடையில் இருக்கும் லட்சாதிபதி சகோதரிகள்; பிற மக்கள் பிரதிநிதிகள்; பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும், குறிப்பாக எனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் – உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
March 08th, 11:45 am
குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.03.2025)தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் அன்பு, பாசம், ஆசீர்வாதங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மகளிர் தினமான இந்தச் சிறப்பு நாளில் நாட்டின் அனைத்து பெண்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மகா கும்பமேளாவில் கங்கை அன்னையின் ஆசீர்வாதம் தனக்கு கிடைத்தது என்றும், இன்று பெண் சக்தியின் மகா கும்பமேளாவில் தனக்கு ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜி-சஃபல் (வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அந்தியோதயா குடும்பங்களுக்கான குஜராத் அரசின் திட்டம்), ஜி-மைத்ரி (கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிப்பற்கான குஜராத் அரசின் திட்டம்) ஆகிய இரண்டு திட்டங்கள் குஜராத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளதைப் பிரதமர் எடுத்துரைத்தார். பல்வேறு திட்டங்களின் நிதி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இந்த சாதனைக்காக அனைவரையும் வாழ்த்தினார்.Our government's intentions, policies and decisions are empowering rural India with new energy: PM
January 04th, 11:15 am
PM Modi inaugurated Grameen Bharat Mahotsav in Delhi. He highlighted the launch of campaigns like the Swamitva Yojana, through which people in villages are receiving property papers. He remarked that over the past 10 years, several policies have been implemented to promote MSMEs and also mentioned the significant contribution of cooperatives in transforming the rural landscape.பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்
January 04th, 10:59 am
புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின் கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப் பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பார்வையை அளித்து, அதற்கான அடையாளத்தை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நபார்டு மற்றும் அதன் கூட்டுறவு அமைப்புகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் கென் - பெட்வா நதிகளை இணைக்கும் தேசிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 25th, 01:00 pm
மாவீரர்களின் பூமியான பண்டேல்கண்ட் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பிரதேசத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதல்வர் திரு மோகன் யாதவ் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு சிவராஜ் சிங், திரு வீரேந்திர குமார் மற்றும் திரு சிஆர் பாட்டீல் அவர்களே, துணை முதல்வர் திரு ஜெகதீஷ் தேவ்தா அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதன்பு சகோதர சகோதரிகளே.மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
December 25th, 12:30 pm
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, வளர்ச்சிப் பணிகளும் வேகம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டமான தௌதான் அணைக்கட்டு, மத்தியப் பிரதேசத்தின் முதலாவது சூரியசக்தி மின் நிலையமான ஓம்கரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'ஓராண்டு நிறைவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
December 17th, 12:05 pm
கோவிந்த் நகரில் நான் கோவிந்த் தேவ் அவர்களுக்கு வணக்கங்களைச் செலுத்துகிறேன். அனைவருக்கும் என் வணக்கங்கள்!ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'ஓராண்டு முடிவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
December 17th, 12:00 pm
ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட ஓராண்டு முடிவில் முன்னேற்றம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் வேகத்தை அதிகரிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை திரு மோடி பாராட்டினார். முதலாம் ஆண்டு வரவிருக்கும் பல ஆண்டு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி அரசின் ஓராண்டு நிறைவைக் குறிப்பது மட்டுமின்றி, ராஜஸ்தானின் பிரகாசமான ஒளியையும் ராஜஸ்தானின் வளர்ச்சித் திருவிழாவையும் அடையாளப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தான் எழுச்சி உச்சி மாநாடு 2024-க்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்கள் அதில் கலந்து கொண்டதாகவும், இன்று ரூ .45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளும் தடைகளுக்கு பொருத்தமான தீர்வை வழங்கும் என்றும், இந்தியாவுடன் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானை மாற்றும் என்றும் அவர் கூறினார். இந்த வளர்ச்சிப் பணிகள் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும். ராஜஸ்தானின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 02nd, 10:15 am
இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
October 02nd, 10:10 am
தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.''மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்பவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்: பிரதமர் மோடி
September 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.India is the best bet of the 21st century: PM Modi at the 4th Global Renewable Energy Investor’s Meet and Expo
September 16th, 11:30 am
Prime Minister Narendra Modi inaugurated the 4th Global Renewable Energy Investor’s Meet and Expo (RE-INVEST) in Gandhinagar, Gujarat. The summit celebrates India's achievement of over 200 GW of non-fossil fuel capacity. The PM said that India's persity, scale, capacity, potential and performance are all unique and pave the way for Indian solutions for global applications.குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
September 16th, 11:11 am
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, 200 ஜிகாவாட் புதைபடிவம அல்லாத எரிபொருள் திறனை நிறுவியதில், இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு முக்கிய பங்களிப்பாளர்களை கௌரவிக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்துறை நிறுவனங்களின் அதிநவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியையும் திரு மோடி பார்வையிட்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
September 06th, 01:00 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
September 06th, 12:30 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.Congress opposes abrogation of Article 370 and CAA to enable divisive politics: PM Modi in Junagadh
May 02nd, 11:30 am
Addressing a rally in Junagadh and attacking the Congress’s intent of pisive politics, PM Modi said, “Congress opposes abrogation of Article 370 and CAA to enable pisive politics.” He added that Congress aims to pide India into North and South. He said that Congress aims to keep India insecure to play its power politics.