இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் மற்றும் உச்சிமாநாடு குறித்து திரு அமிதாப் காந்த் எழுதிய புத்தகத்திற்கு பிரதமர் பாராட்டு

January 21st, 03:44 pm

இந்தியாவின் ஜி-20 தலைமைப் பொறுப்பு மற்றும் உச்சிமாநாடு 2023 குறித்து புத்தகம் எழுத திரு அமிதாப் காந்த் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஒரு சிறந்த பூமியை உருவாக்குவதில் மனிதகுலத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்த தெளிவான கண்ணோட்டத்தை அவர் வழங்கியுள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

October 09th, 02:26 pm

எண்ணெய் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உயிரி எரிசக்தியின் தேவையை எடுத்துரைத்து, எரிசக்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கிழக்கு இந்தியாவில் உள்ள எரியாற்றலை பெறுவது குறித்தும் வலியுறுத்தினார். இந்தியா சுத்தமான ஆற்றல் மிக்க எரிசக்தியை நோக்கி முன்னேறி வருகிறது என்றும், அதன் பலன் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.