புகழ்பெற்ற வானொலி ஆளுமை அமீன் சயானி மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
February 21st, 01:02 pm
புகழ்பெற்ற வானொலி ஆளுமை அமீன் சயானி மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய ஒலிபரப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியதில் அமீன் சயானி முக்கியப் பங்காற்றியதாகவும், தமது படைப்புகள் மூலம் நேயர்களிடையே சிறப்பான பிணைப்பை வளர்த்ததாகவும் திரு மோடி கூறினார்.