India is not only the custodian of the sacred relics of Bhagwan Buddha, but also a living carrier of that timeless tradition: PM Modi

January 03rd, 12:00 pm

PM Modi inaugurated the Grand International Exposition of Sacred Piprahwa Relics related to Bhagwan Buddha, highlighting his close connection with Buddhist pilgrim sites. The PM noted that wherever the sacred relics of Bhagwan Buddha travelled in recent months, waves of faith and devotion were witnessed. Listing various initiatives undertaken by the government to preserve Buddhist heritage, he highlighted that Pali has been accorded the status of a classical language.

பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

January 03rd, 11:30 am

புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில், ஒளி மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில், பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நூற்று இருபத்தைந்து ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவின் பாரம்பரியம் திரும்பியுள்ளது, இந்தியாவின் மரபு மீண்டும் வந்துள்ளது என்று குறிப்பிட்டார். இன்று முதல் இந்திய மக்கள் புத்தரின் இந்த புனித நினைவுச்சின்னங்களைக் கண்டு அவரது ஆசிகளைப் பெற முடியும் என்று அவர் கூறினார். இந்த மங்களகரமான நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களையும் திரு மோடி வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த மங்களகரமான கொண்டாட்டம் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். புத்தரின் ஆசீர்வாதங்களுடன், 2026-ம் ஆண்டு உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்கட்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசம் அமராவதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

May 02nd, 03:45 pm

ஆந்திர ஆளுநர் திரு சையத் அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சரும் எனது நண்பருமான திரு சந்திரபாபு நாயுடு அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, ஆற்றல் மிக்க துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் அவர்களே, மாநில அமைச்சர்களே, அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே!

ஆந்திர மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார், நிறைவடைத திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

May 02nd, 03:30 pm

ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமராவதி என்ற புனித பூமியில் நிற்கும்போது, ​​வெறும் ஒரு நகரத்தை மட்டுமல்ல, ஒரு புதிய அமராவதி, ஒரு புதிய ஆந்திரா என்ற கனவை நனவாக்குவதையும் தான் காண்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார். அமராவதி, பாரம்பரியமும் முன்னேற்றமும் கைகோர்த்துச் செல்லும் ஒரு பூமி, அதன் புத்த பாரம்பரியத்தின் அமைதியையும், வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் ஆற்றலையும் தழுவிச் செல்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும், இந்தத் திட்டங்கள் வெறும் கான்கிரீட் கட்டமைப்புகளைப் பற்றியது மட்டுமல்ல, ஆந்திரப் பிரதேசத்தின் அபிலாஷைகள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையின் வலுவான அடித்தளமாகும் என்றும் அவர் மேலும் கூறினார். பிரதமர் மோடி ஆந்திரப் பிரதேச மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, பகவான் வீரபத்ரர், பகவான் அமரலிங்கேஸ்வரர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகியோரை பிரார்த்தனை செய்தார். முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் திரு. பவன் கல்யாண் ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நாளையும் நாளை மறுநாளும்(மே 1 மற்றும் 2-ம் தேதி பிரதமர் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் செல்கிறார்

April 30th, 03:42 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளையும் நாளை மறுநாளும் (மே 1 மற்றும் 2-ம் தேதி) மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். மே 1-ம் தேதி மும்பை செல்லும் அவர், காலை 10.30 மணிக்கு வேவ்ஸ் உலக ஒலி-ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.

5 ஆண்டுகளில் இணைப்பை மேம்படுத்தி, பயணத்தை எளிதாக்கவும், சரக்கு போக்குவரத்து செலவு, எண்ணெய் இறக்குமதி மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் ரூ. 6,798 கோடி மதிப்பீட்டிலான இரண்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

October 24th, 03:12 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 6,798 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

PM in Andhra Pradesh on Vijaya Dashami

October 22nd, 10:37 pm



Urban development should be taken up as an opportunity not as a challenge: PM at foundation ceremony of 'Amravati' in Andhra Pradesh

October 22nd, 04:09 pm



PM lays foundation stone of Amaravati

October 22nd, 03:05 pm