எஸ்டோனியா குடியரசு அதிபரை பிரதமர் சந்தித்தார்
February 11th, 06:19 pm
இந்தியாவிற்கும், எஸ்டோனியாவிற்கும் இடையிலான அன்பான நட்புறவு என்பது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம், பன்மைத்துவத்தின் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பகிரப்படும் உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் மோடியும், அதிபர் காரிஸும் சுட்டிக்காட்டினார்கள். வர்த்தகம், முதலீடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு, கலாச்சாரம், சுற்றுலா, மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இணையப் பாதுகாப்புத் துறையில் நடைபெற்று வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்தியாவின் வளர்ச்சி குறித்த வாய்ப்புகளை ஆராயவும், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் எஸ்டோனிய அரசு மற்றும் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.