இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பயணத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
June 05th, 05:10 pm
இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பயணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும், 5 ஜிகாவாட் அளவுக்கு தரவு மையத் திறனை மேம்படுத்தவும் ஏர் ட்ரங்க் நிறுவனம் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், இது நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு சூழல் அமைப்பில் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.