'மன் கீ பாத்' (மனதின் குரல்) என்பது மக்களின் கூட்டு முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறந்த தளமாகும்: பிரதமர் மோடி
November 30th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்'தில் (மனதின் குரல்), அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு, அயோத்தியில் தர்ம த்வஜ் ஏற்றுதல், ஐஎன்எஸ் 'மஹே' கப்பல் அறிமுகம் மற்றும் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீத மஹோத்சவம் உள்ளிட்ட நவம்பர் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உணவு தானியங்கள் மற்றும் தேன் உற்பத்தியில் சாதனை, இந்தியாவின் விளையாட்டு வெற்றிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பல முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.The new Safran facility will help establish India as a global MRO hub: PM Modi during the inauguration of SAESI in Hyderabad, Telangana
November 26th, 10:10 am
During the inauguration of the Safran Aircraft Engine Services India facility in Hyderabad, PM Modi remarked that the new establishment will strengthen India’s emergence as a global MRO hub. Highlighting the employment opportunities, it will create for the youth of South India, he noted that the facility will give fresh momentum to the entire MRO ecosystem. The PM said that India considers investors as co-creators and stakeholders in the journey towards a developed India.ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
November 26th, 10:00 am
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா - சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று முதல் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை புதிய பாதையில் பயணிக்கிறது. சஃப்ரானின் புதிய நிறுவனம் இந்தியாவை உலகளாவிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (எம்ஆர்ஓ) மையமாக நிலைநிறுத்த உதவும் என்றார். இந்த எம்ஆர்ஓ மையம் உயர் தொழில்நுட்ப விண்வெளித் துறையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். சஃப்ரான் வாரியம் மற்றும் நிர்வாகத்தை நவம்பர் 24 அன்று சந்தித்ததை நினைவு கூர்ந்த அவர், முன்னதாக அவர்களுடனான ஒவ்வொரு கலந்துரையாடலிலும், இந்தியா குறித்த அவர்களின் நம்பிக்கையைத் தாம் கண்டதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் சஃப்ரானின் முதலீடு இதே வேகத்தில் தொடரும் என்ற தமது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தினார். இந்தப் புதிய நிறுவனத்திற்காக சஃப்ரான் குழுவிற்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டு தொலைநோக்கு: சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வழிநடத்த எட்டு வழிகாட்டுதல்கள்
August 29th, 07:11 pm
சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் நீண்ட பாரம்பரியத்தையும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும் கொண்ட இந்தியாவும் ஜப்பானும், அடுத்த பத்தாண்டுகளில் உள் நாட்டிலும் உலகிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை கூட்டாக வழிநடத்தவும், அந்தந்த நாட்டு இலக்குகளை அடைய உதவவும், நமது நாடுகளையும் அடுத்த தலைமுறை மக்களையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டுவரவும் எங்கள் நோக்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாட்டின் முழு அமர்வில் பிரதமரின் உரை
June 02nd, 05:34 pm
எனது சகாக்களான மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு மற்றும் முரளிதர் மொஹோல், ஐஏடிஏ ஆளுநர்கள் குழுவின் தலைவர் பீட்டர் எல்பர்ஸ் தலைமை இயக்குநர் வில்லி வால்ஷ், இண்டிகோவின் நிர்வாக இயக்குநர் ராகுல் பாட்டியா, மற்ற அனைத்து பிரமுகர்களே, பெண்களே மற்றும் தாய்மார்களே!பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஐஏடிஏவின் 81வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டின் அமர்வில் உரையாற்றினார்
June 02nd, 05:00 pm
உலகத்தரம் வாய்ந்த விமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், இணைப்பை அதிகப்படுத்துவதற்கும், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) 81வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டின் அமர்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், விருந்தினர்களை வரவேற்று, நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு இந்தியாவில் நடப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவர் வலியுறுத்தியதுடன், இன்றைய இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார். உலகளாவிய விமானப் போக்குவரத்து சூழலியலில் இந்தியாவின் பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், இது ஒரு பரந்த சந்தையாக மட்டுமல்லாமல், கொள்கை சார்ந்த தலைமை, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் அடையாளமாகவும் உள்ளது, என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகவும், அவை நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த பிரதமர், இன்று, விண்வெளி-விமான ஒருங்கிணைப்பில் இந்தியா ஒரு உலகளாவிய தலைமையாக வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.ஆதம்பூர் விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப் படை வீரர்கள், ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை
May 13th, 03:45 pm
இந்த முழக்கத்தின் சக்தியை உலகம் தற்போதுதான் கண்டிருக்கிறது. பாரத் மாதா கி ஜெய் என்பது வெறும் முழக்கம் அல்ல, பாரத தாயின் கௌரவம் மற்றும் கண்ணியத்திற்காக தமது உயிரைப் பணயம் வைக்கும் நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரரின் சபதமாகும். நாட்டிற்காக வாழ விரும்பும், ஏதாவது சாதிக்க விரும்பும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரல் இது. நமது ட்ரோன்கள் எதிரியின் கோட்டையின் சுவர்களை அழிக்கும்போது, நமது ஏவுகணைகள் ஒரு சத்தத்துடன் இலக்கை அடையும்போது, எதிரி கேட்கிறான் - பாரத் மாதா கி ஜெய்! நமது படைகள் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் போது, வானத்திலிருந்து உலகம் வரைக்கும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே எதிரொலிக்கிறது - பாரத் மாதா கி ஜெய்!பிரதமர் திரு நரேந்திர மோடி துணிச்சல்மிக்க விமானப்படைப் போர் வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்களுடன் ஆதம்பூரில் விமானப் படை நிலையத்தில் உரையாடினார்.
May 13th, 03:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார். அவர்களிடம் உரையாற்றிய அவர், 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தின் சக்தியை எடுத்துரைத்தார், உலகம் அதன் வலிமையைக் கண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, பாரதத் தாயின் கண்ணியத்தை நிலைநிறுத்த தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் ஒரு புனிதமான உறுதிமொழி என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முழக்கம் நாட்டிற்காக வாழவும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகும் என்று மேலும் கூறினார். போர்க்களத்திலும் முக்கியமான பணிகளிலும் 'பாரத் மாதா கி ஜெய்' எதிரொலிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய வீரர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிடும்போது, அது எதிரியின் முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ராணுவ வலிமையை அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்திய ட்ரோன்கள் எதிரிகளின் கோட்டைகளை தாக்கும் போது, ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கும் போது, எதிரி 'பாரத் மாதா கி ஜெய்' என்ற ஒரே ஒரு சொற்றொடரை மட்டுமே கேட்கிறார் என்று கூறினார். இருண்ட இரவுகளிலும் கூட, எதிரிகள் நம் நாட்டின் வெல்ல முடியாத உணர்வைக் காணும்படி கட்டாயப்படுத்தும் வகையில், வானத்தை ஒளிரச் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அணு ஆயுத அச்சுறுத்தல்களை இந்தியப் படைகள் தகர்த்தெறியும்போது, 'பாரத் மாதா கி ஜெய்' என்ற செய்தி வானத்திலும் எதிரொலிக்கிறது என்று கூறினார்.என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 11:00 am
ஐடிவி நெட்வொர்க் நிறுவனரும் நாடாளுமன்றத்தில் எனது சகாவுமான கார்த்திகேய சர்மா அவர்களே, இந்த நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த குழுவினரே, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களே, தாய்மார்களே வணக்கம். நியூஸ் எக்ஸ் வேர்ல்டின் மங்களகரமான தொடக்கத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று, இந்தி, ஆங்கிலம் உட்பட உங்கள் நெட்வொர்க்கின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளும் உலக அளவில் செல்கின்றன.என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
March 01st, 10:34 am
கடந்த காலங்களில் இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொண்டதாகவும், ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் இப்போது ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்த சாதனைக்காக சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுபோன்ற ஊடக நிகழ்வுகள் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். இதன் உச்சிமாநாடு, கொள்கைகள் பற்றிய விவாதத்தில் கவனம் செலுத்தியது என்றும், அரசியலை மையமாகக் கொண்டு ஒப்பிடும்போது கொள்கைகள் மையமாக இருந்தன ன்றும் அவர் கூறினார். இந்த உச்சிமாநாடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஒரு புதுமையான மாதிரியில் பணியாற்றியுள்ளதாக ஒப்புக் கொண்ட அவர், மற்ற ஊடக நிறுவனங்கள் இந்த போக்கையும் வார்ப்புருவையும் தங்கள் சொந்த புதுமையான வழிகளில் வளப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை
January 15th, 11:08 am
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய முன்னணி கடற்படை போர் கப்பல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 15th, 10:30 am
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். இந்த தருணத்தில் அனைத்து துணிச்சலான வீரர்களையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்தார்.பிரதமர், அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்
October 26th, 03:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று குஜராத் செல்கிறார். காலை 10 மணியளவில், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்செஸுடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாக பிரதமர் திறந்து வைப்பார். அதன்பிறகு காலை 11 மணியளவில் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார். வதோதராவிலிருந்து அம்ரேலி செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவாரைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3 மணியளவில், அம்ரேலியில் உள்ள லாத்தியில் ரூ .4,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.புதுதில்லியில் நடைபெற்ற 2-வது ஆசிய பசிபிக் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
September 12th, 04:00 pm
பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் நான் மனதார வரவேற்கிறேன். கடந்த இரண்டு நாட்களில், இந்தத் துறை தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து நீங்கள் விவாதித்தீர்கள். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சில பிரகாசமான எண்ணங்கள் நம்மிடம் உள்ளன என்று நான் நம்புகிறேன், இது நமது கூட்டு உறுதிப்பாட்டையும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் திறனையும் பிரதிபலிக்கிறது. இந்த அமைப்பு 80 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, நமது அமைச்சர் திரு நாயுடுவின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று மூலம் 80,000 மரங்களை நடவு செய்யும் ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், மற்றொரு விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நம் நாட்டில், ஒருவர் 80 வயதை எட்டும் போது, அது ஒரு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர்களின் கூற்றுப்படி, 80 வயதை எட்டுவது என்றால் ஆயிரம் பௌர்ணமிகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வகையில், எங்கள் துறை நிறுவனமும் ஆயிரம் பௌர்ணமிகளைக் கண்டுள்ளது மற்றும் அதை நெருக்கமாகப் பார்த்த அனுபவம் உள்ளது.BJP is emphasizing the true social empowerment of Dalits and OBC: PM Modi in Patiala, Punjab
May 23rd, 05:00 pm
Ahead of the impending Lok Sabha elections in 2024, Prime Minister Narendra Modi addressed a powerful rally amid a passionate welcome by the people of Patiala, Punjab. PM Modi began his address by paying rich tributes to the land of ‘Guru Tegh Bahadur.’ He said, “After the five phases of voting, the message of the people of India resonates with ‘Fir ek Baar, Modi Sarkar’.” He urged Punjab to vote for the BJP to ensure a ‘Viksit Bharat.’Passionate welcome for PM Modi in Patiala as he addresses a powerful rally in Punjab
May 23rd, 04:30 pm
Ahead of the impending Lok Sabha elections in 2024, Prime Minister Narendra Modi addressed a powerful rally amid a passionate welcome by the people of Patiala, Punjab. PM Modi began his address by paying rich tributes to the land of ‘Guru Tegh Bahadur.’ He said, “After the five phases of voting, the message of the people of India resonates with ‘Fir ek Baar, Modi Sarkar’.” He urged Punjab to vote for the BJP to ensure a ‘Viksit Bharat.’ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 02:15 pm
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனதுநண்பர்கள் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, திரு கஜேந்திர ஷெகாவத் அவர்களே, திரு கைலாஷ் சவுத்ரி அவர்களே, பொதுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பேராசிரியர் திரு அஜய் சூட் அவர்களே, முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் அவர்களே, விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி அவர்களே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் அவர்களே, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அவர்களே, மூத்த அதிகாரிகளே, முப்படைகளின் துணிச்சலான வீரர்களே, பொக்ரானில் கூடியிருக்கும் எனதருமை சகோதர சகோதரிகளே!ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சியை பிரதமர் பார்வையிட்டார்
March 12th, 01:45 pm
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று முப்படைகளின் நேரடி பயிற்சியின் வடிவத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை ஒருங்கிணைத்து செய்யப்பட்ட செயல் விளக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடியை பார்வையிட்டார். நாட்டின் தற்சார்பு இந்தியா முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 'பாரத் சக்தி' உள்நாட்டு ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களின் வரிசையைக் கொண்டிருக்கும்.