ஜி20 உச்சிமாநாட்டின் 3-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 23rd, 04:05 pm

தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அது தொடர்பான வாய்ப்புகள், வளங்கள் இரண்டும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும், முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கு கவலை அளிக்கும் விஷயம். மேலும் இது புதுமைக்கும் ஒரு தடையாக அமைகிறது. இதை நிவர்த்தி செய்ய, நமது அணுகுமுறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

November 23rd, 04:02 pm

'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' - முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் 'மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். விண்வெளி பயன்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 23rd, 12:45 pm

ஐபிஎஸ்ஏ என்பது, மூன்று நாடுகளின் மன்றம் மட்டுமல்ல; மூன்று கண்டங்கள், மூன்று முக்கிய ஜனநாயக சக்திகள் மற்றும் மூன்று குறிப்பிடத்தக்க பொருளாதாரங்களை இணைக்கும் முக்கிய தளமாகவும் செயல்படுகிறது. நமது பன்முகத்தன்மை, பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் லட்சியங்களில் வேரூன்றிய ஆழமான மற்றும் உறுதியான கூட்டு முயற்சியாகவும் இது விளங்குகிறது.

ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்

November 23rd, 12:30 pm

இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார். வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருவதை அவர் குறிப்பிட்டார். அதில் மூன்று கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, மனிதநேய மேம்பாடு, பலதரப்பு சீர்திருத்தம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல முக்கிய முயற்சிகள் உருவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்

September 06th, 06:11 pm

பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ஹொரைசான் 2047 செயல்திட்டம் , இந்தோ-பசிபிக் செயல்திட்டம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை செயல்திட்டத்துக்கு ஏற்ப, இந்தியா-பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் தலைவர்கள் மீண்டும் பகிர்ந்து கொண்டனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியை பின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்

August 27th, 08:32 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியை பின்லாந்து அதிபர் மாண்புமிகு திரு அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் மோதலைத் தீர்ப்பது தொடர்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்களுக்கு இடையே வாஷிங்டனில் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்த தனது கருத்துக்களை அதிபர் திரு ஸ்டப் பகிர்ந்து கொண்டார்.