அகமதாபாதில் துயரமான விமான விபத்தில் காயமடைந்தோரை பிரதமர் சந்தித்தார்
June 13th, 02:14 pm
பல உயிர்களைப் பலி கொண்ட துயரமான விமான விபத்துக்குப் பின் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அகமதாபாத் சென்றிருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்த திரு மோடி, விபத்தில் தப்பிப்பிழைத்த ஒருவர் உட்பட காயமடைந்தவர்களை சந்தித்ததுடன் இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு நாட்டின் முழுமையான ஆதரவை உறுதிசெய்தார்.அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
June 13th, 10:53 am
அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தில் நேரிட்ட ஏராளமான உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பங்களுக்கு அவர் தமது இரங்கலைத் தெரிவித்தார், அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் மகத்தான வலி மற்றும் இழப்பை தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவிதாதர்.அகமதாபாத் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
June 12th, 04:15 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான துயரச் சம்பவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த துயரச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், இதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்றும் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.