அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின், இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

June 10th, 01:59 pm

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது. கோட்டேஷ்வர் சாலை முதல் விமான நிலையம் வரையில், 6.032 கி.மீ நீளமுள்ள வழித்தடத்தையும், 5 ரயில் நிலையங்களையும் (இதில் 4 உயர்மட்ட பாலம், பூமிக்கடியில் 1 நிலையம்) உள்ளடக்கியுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, அகமதாபாத்-காந்திநகர் இடையே, மொத்தம் 77.63 கி.மீ நீளமுள்ள மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டிற்கு வரும். இந்த வழித்தடத்தில், ஆசிரமம் சாலை, கோட்டேஷ்வர் பிராச்சின் மந்திர், சபர்மதி நதி, சர்தார் நகர், விமான நிலையம் ஆகிய ரயில் நிலையங்கள் அமையவுள்ள.

கிஃப்ட் நகரத்திலிருந்து குஜராத் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஷாபூர் வரை தற்போதுள்ள வடக்கு – தெற்கு வழித்தடத்தின் நீட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

February 24th, 03:33 pm

குஜராத் மாநிலம் கிஃப்ட் நகரத்திலிருந்து ஷாபூர் வரையிலான 3.3 கிமீ தொலைவுள்ள வழித்தட நீட்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 4 ஆண்டுகளில் நிறைவடையும். இந்த வழித்தடத்தில் 3 உயர்மட்ட நிலையங்களும் அமைக்கப்படும்.

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

September 16th, 02:42 pm

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பயணத்தின் போது மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.