குவைத் அமீரை பிரதமர் சந்தித்தார்

December 22nd, 05:08 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவைச் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பயான் அரண்மனையை வந்தடைந்த பிரதமருக்கு , குவைத் பிரதமர் அஹ்மத் அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார்.