We will reduce terrorists to dust, their handlers will face unimaginable punishment: PM Modi in Lok Sabha

July 29th, 05:32 pm

Prime Minister Narendra Modi, speaking in the Lok Sabha during the special discussion on Operation Sindoor, strongly defended the military action taken in response to the April 22 terror attack in Pahalgam. He took sharp aim at the Congress, accusing it of undermining the morale of the armed forces. “India received support from across the world, but it is unfortunate that the Congress could not stand with the bravery of our soldiers,” the Prime Minister said.

ஆபரேஷன் சிந்தூர் குறித்த மக்களவை சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் விஜய் உத்சவ் (வெற்றி விழா) இந்திய ஆயுதப் படைகளின் வீரத்திற்கும் வலிமைக்கும் ஒரு சான்றாகும்: பிரதமர்

July 29th, 05:00 pm

பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான, தீர்க்கமான 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். அவையின் கூட்டத்தொடர் தொடக்கத்தில் ஊடகவியலாளர்களுடனான தமது உரையாடலை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த அமர்வு இந்தியாவின் வெற்றியின் கொண்டாட்டமாகவும், இந்தியாவின் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறினார்.

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப் படை வீரர்கள், ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை

May 13th, 03:45 pm

இந்த முழக்கத்தின் சக்தியை உலகம் தற்போதுதான் கண்டிருக்கிறது. பாரத் மாதா கி ஜெய் என்பது வெறும் முழக்கம் அல்ல, பாரத தாயின் கௌரவம் மற்றும் கண்ணியத்திற்காக தமது உயிரைப் பணயம் வைக்கும் நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரரின் சபதமாகும். நாட்டிற்காக வாழ விரும்பும், ஏதாவது சாதிக்க விரும்பும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரல் இது. நமது ட்ரோன்கள் எதிரியின் கோட்டையின் சுவர்களை அழிக்கும்போது, ​​நமது ஏவுகணைகள் ஒரு சத்தத்துடன் இலக்கை அடையும்போது, ​​எதிரி கேட்கிறான் - பாரத் மாதா கி ஜெய்! நமது படைகள் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் போது, ​​வானத்திலிருந்து உலகம் வரைக்கும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே எதிரொலிக்கிறது - பாரத் மாதா கி ஜெய்!

பிரதமர் திரு நரேந்திர மோடி துணிச்சல்மிக்க விமானப்படைப் போர் வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்களுடன் ஆதம்பூரில் விமானப் படை நிலையத்தில் உரையாடினார்.

May 13th, 03:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார். அவர்களிடம் உரையாற்றிய அவர், 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தின் சக்தியை எடுத்துரைத்தார், உலகம் அதன் வலிமையைக் கண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, பாரதத் தாயின் கண்ணியத்தை நிலைநிறுத்த தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் ஒரு புனிதமான உறுதிமொழி என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முழக்கம் நாட்டிற்காக வாழவும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகும் என்று மேலும் கூறினார். போர்க்களத்திலும் முக்கியமான பணிகளிலும் 'பாரத் மாதா கி ஜெய்' எதிரொலிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய வீரர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிடும்போது, அது எதிரியின் முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ராணுவ வலிமையை அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்திய ட்ரோன்கள் எதிரிகளின் கோட்டைகளை தாக்கும் போது, ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கும் போது, எதிரி 'பாரத் மாதா கி ஜெய்' என்ற ஒரே ஒரு சொற்றொடரை மட்டுமே கேட்கிறார் என்று கூறினார். இருண்ட இரவுகளிலும் கூட, எதிரிகள் நம் நாட்டின் வெல்ல முடியாத உணர்வைக் காணும்படி கட்டாயப்படுத்தும் வகையில், வானத்தை ஒளிரச் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அணு ஆயுத அச்சுறுத்தல்களை இந்தியப் படைகள் தகர்த்தெறியும்போது, 'பாரத் மாதா கி ஜெய்' என்ற செய்தி வானத்திலும் எதிரொலிக்கிறது என்று கூறினார்.

ஆதம்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் பிரதமர் துணிச்சல்மிக்க போர் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார்

May 13th, 01:04 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆதம்பூரில் உள்ள விமானப் படை நிலையத்துக்குச் சென்று நமது துணிச்சல்மிக்க விமானப்படை போர் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார். “துணிச்சல், உறுதிப்பாடு, மற்றும் அச்சமின்மைக்கு காவியமாகத் திகழ்பவர்களுடன் இருந்தது மிகவும் சிறந்த அனுபவமாகும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.