இந்தியா – பிரான்ஸ் கூட்டறிக்கை

February 18th, 08:10 am

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் 2026 பிப்ரவரி 17 முதல் 19 வரை இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு, செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் பங்கேற்றார். அப்போது பிப்ரவரி 17 அன்று மும்பையில் இந்தியா – பிரான்ஸ் புதிய கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்து இருதரப்பு பேச்சு நடத்தினார்கள். இது பிரான்ஸ் அதிபர் மேக்ரோனின் 4-வது இந்திய பயணமாகும். 2025 பிப்ரவரி மாதத்தில் பிரதமர் திரு மோடி, பிரான்சில் பயணம் மேற்கொண்டார்.

With innovative ideas, energy and purpose, Yuva Shakti is at the forefront of nation-building: PM Modi

January 12th, 06:45 pm

In his address at the concluding session of the Viksit Bharat Young Leaders Dialogue 2026, PM Modi underscored the critical role of youth leadership in realising the vision of a developed India. He highlighted key reforms and initiatives such as Startup India, Digital India, Ease of Doing Business, and the simplification of tax and compliance, which accelerated India’s startup revolution. The PM encouraged the youth to move forward with confidence, expressing unwavering faith in their potential.

வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாடு 2026-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

January 12th, 06:30 pm

புதுதில்லியில் இன்று (12 ஜனவரி 2026) நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாடு 2026-ன் நிறைவு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், உரையாற்றிய அவர், இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047 வரையிலான காலம், நாட்டிற்கும் அதன் இளைஞர்களுக்கும் மிக முக்கியமான கட்டமாகும் என்று வலியுறுத்தினார். இளம் இந்தியர்களின் ஆற்றலும், திறன்களும் இந்தியாவின் வலிமையை வடிவமைக்கும் என்றும், அவர்களின் வெற்றி, நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களை வாழ்த்திய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் இளைஞர்களின் தலைமையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அடர்த்தியாக்கப்பட்ட அரிய புவி நிரந்தர காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் ரூ.7,280 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

November 26th, 04:25 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (26 நவம்பர் 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.7280 கோடி நிதி ஒதுக்கீட்டில் 'அடர்த்தியாக்கப்பட்ட அரிய புவி நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு' ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த அரிய புவி நிரந்தர காந்த (ஆர்இபிஎம்) உற்பத்தியை நிறுவுவதை இந்த முதல்முறை முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தற்சார்பை மேம்படுத்தி, உலகளாவிய ஆர்இபிஎம் சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடாக நிலைநிறுத்த முடியும்.

The new Safran facility will help establish India as a global MRO hub: PM Modi during the inauguration of SAESI in Hyderabad, Telangana

November 26th, 10:10 am

During the inauguration of the Safran Aircraft Engine Services India facility in Hyderabad, PM Modi remarked that the new establishment will strengthen India’s emergence as a global MRO hub. Highlighting the employment opportunities, it will create for the youth of South India, he noted that the facility will give fresh momentum to the entire MRO ecosystem. The PM said that India considers investors as co-creators and stakeholders in the journey towards a developed India.

ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

November 26th, 10:00 am

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா - சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று முதல் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை புதிய பாதையில் பயணிக்கிறது. சஃப்ரானின் புதிய நிறுவனம் இந்தியாவை உலகளாவிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (எம்ஆர்ஓ) மையமாக நிலைநிறுத்த உதவும் என்றார். இந்த எம்ஆர்ஓ மையம் உயர் தொழில்நுட்ப விண்வெளித் துறையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். சஃப்ரான் வாரியம் மற்றும் நிர்வாகத்தை நவம்பர் 24 அன்று சந்தித்ததை நினைவு கூர்ந்த அவர், முன்னதாக அவர்களுடனான ஒவ்வொரு கலந்துரையாடலிலும், இந்தியா குறித்த அவர்களின் நம்பிக்கையைத் தாம் கண்டதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் சஃப்ரானின் முதலீடு இதே வேகத்தில் தொடரும் என்ற தமது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தினார். இந்தப் புதிய நிறுவனத்திற்காக சஃப்ரான் குழுவிற்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மார்ச் 30-ம் தேதி பிரதமர் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு பயணம்

March 28th, 02:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மார்ச் 30-ம் தேதி மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். முதலில் நாக்பூர் செல்லும் அவர், அங்கு காலை 9 மணியளவில் ஸ்மிருதி கோவிலில் வழிபாடு செய்கிறார். பின்னர் அவர் தீக்ஷாபூமிக்கு செல்கிறார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை

February 12th, 03:22 pm

பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள், கல்வித்துறை பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுகூடினர். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறை பொது நலனுக்காக நன்மை பயக்கும் என்பதையும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு நல்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர். பிரான்சின் செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமர் மோடி, அதிபர் மக்ரோனை வாழ்த்தினார். அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதை பிரான்ஸ் வரவேற்றது.

14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

February 12th, 12:25 am

பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மன்றத்தில் ஒன்று கூடினர்.

நியூசிலாந்து பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்

July 20th, 02:37 am

பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், மக்களுக்கு இடையேயான உறவுகளில் வேரூன்றிய இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்

PM Modi attends News18 Rising Bharat Summit

March 20th, 08:00 pm

Prime Minister Narendra Modi attended and addressed News 18 Rising Bharat Summit. At this time, the heat of the election is at its peak. The dates have been announced. Many people have expressed their opinions in this summit of yours. The atmosphere is set for debate. And this is the beauty of democracy. Election campaigning is in full swing in the country. The government is keeping a report card for its 10-year performance. We are charting the roadmap for the next 25 years. And planning the first 100 days of our third term, said PM Modi.

கேரள மாநிலம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 27th, 12:24 pm

கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராயி விஜயன் அவர்களே, எனது சகாவும் இணையமைச்சருமான திரு வி. முரளீதரன் அவர்களே, இஸ்ரோ குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, அனைவரும் வணக்கம்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்

February 27th, 12:02 pm

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் எஸ்.எல்.வி ஒருங்கிணைப்பு வசதி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் புதிய 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின், நிலைப் பரிசோதனை வசதி, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 'டிரைசோனிக் காற்றியல் சுரங்கம்' ஆகியவை அடங்கும். ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த திரு மோடி, நான்கு விண்வெளி வீரர்களுக்கு 'விண்வெளி வீரர் பதக்கங்களை' வழங்கினார். குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நடத்திய மெய்நிகர் கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்

February 14th, 04:31 pm

முதற்கண் ஏர் இந்தியா ஏர்பஸ் நிறுவனங்கள் செய்து கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நான் பாராட்டுகின்றேன். குறிப்பாக இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எனது நண்பர் அதிபர் மேக்ரோனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

ஏர் இந்தியா- ஏர்பஸ் கூட்டணியின் புதிய முயற்சியை முன்னிட்டு ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவேல் மேக்ரானுடன் காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

February 14th, 04:30 pm

ஏர் இந்தியா- ஏர்பஸ் கூட்டணியின் புதிய முயற்சியை முன்னிட்டு ஃபிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவேல் மேக்ரான், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு ரிட்டன் டாட்டா, நிறுவனத்தின் வாரிய தலைவர் திரு என், சந்திரசேகரன், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கேம்ப்பெல் வில்சன் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு குலாம் ஃபாரி ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.

கர்நாடக மாநிலம் துமாகூருவில் எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தும் ‘துமாகூரு தொழில்துறை நகரத்திற்கு’ அடிக்கல் நாட்டியும் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 06th, 04:20 pm

கர்நாடகா என்பது துறவிகள் மற்றும் முனிவர்களின் பூமியாகும். இந்தியாவின் மகத்தான பாரம்பரியமான ஆன்மீகம், ஞானம், அறிவியல் ஆகியவற்றை கர்நாடகா எப்போதும் வலுப்படுத்தியுள்ளது. இதிலும் கூட, துமாகூரு தனித்துவ இடத்தைப் பெற்றுள்ளது. சித்த கங்கா மடம் இதில் மிகப் பெரிய பங்களிப்பை செய்துவருகிறது. “அன்னம்”, “கல்வி”, “உறைவிடம்” எனும் மூன்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ‘த்ரிவித தசோகா’ என்பதை உருவாக்கி சிவகுமார சுவாமி அவர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை இன்று ஸ்ரீ சித்தலிங்க மகாசுவாமி, முன்னெடுத்துச் செல்கிறார். குப்பியில் இடம் பெற்றுள்ள ஸ்ரீ சிதம்பர ஆசிரமத்திற்கும் பகவான் சன்ன பசவேஸ்வராவுக்கும் நான் தலை வணங்குகிறேன். (கன்னட மொழியிலான வாழ்த்துரை)

தும்கூரில் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

February 06th, 04:12 pm

தும்கூரில் ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தொழிற்சலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல், தும்கூர் தொழிற்பேட்டை, திப்தூர் மற்றும் சிக்கநாயகனஹள்ளியில் 2 ஜல்ஜீவன் இயக்கத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஹெலிகாப்டர் தொழிற்சாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட பிரதமர், இலகு ரக ஹெலிகாப்டரையும் திறந்துவைத்தார்.

Vision of self-reliant India embodies the spirit of global good: PM Modi in Indonesia

November 15th, 04:01 pm

PM Modi interacted with members of Indian diaspora and Friends of India in Bali, Indonesia. He highlighted the close cultural and civilizational linkages between India and Indonesia. He referred to the age old tradition of Bali Jatra” to highlight the enduring cultural and trade connect between the two countries.

இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர் மற்றும் இந்திய நண்பர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

November 15th, 04:00 pm

இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர், இந்தியாவின் நண்பர்கள் அடங்கிய 800-க்கும் மேற்பட்டோருடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடியதுடன் அவர்களிடையே உரையாற்றினார். இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்கள் எழுச்சியுடன் குழுமியிருந்தனர்.

வதோதராவில் விமான உற்பத்தி ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை

October 30th, 02:47 pm

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, குஜராத் முதல்வர் திரு புபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு ராஜநாத் சிங் அவர்களே, திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அவர்களே, ஏர்பஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அவர்களே, பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!