பிரபல நடிகர் திரு தர்மேந்திரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 24th, 03:06 pm

பிரபல நடிகர் திரு தர்மேந்திராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது இந்திய சினிமா சகாப்தத்தில் ஒரு முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரு சதீஷ் ஷாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

October 25th, 07:44 pm

பழம்பெரும் நடிகர் திரு சதீஷ் ஷாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பொழுதுபோக்குத் துறையின் சிறந்த ஆளுகை என்று அவருக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

முதுபெரும் நடிகர் திரு கோவர்தன் அஸ்ரானியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

October 21st, 09:16 am

முதுபெரும் நடிகர் திரு கோவர்தன் அஸ்ரானியின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் புகழ்பெற்ற கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும், பல தலைமுறை பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் அவரது திறமையையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

This is the right time to Create In India, Create For The World: PM Modi at WAVES Summit

May 01st, 03:35 pm

At the inaugural address of WAVES 2025, PM Modi called it a landmark moment for the global creative community. He emphasized that the summit unites over 100 nations through storytelling, music, gaming, and innovation, showcasing India's leadership in culture and creativity.

பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்

May 01st, 11:15 am

மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.

பழம்பெரும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

April 04th, 08:34 am

பழம்பெரும் திரைப்பட நடிகரும், திரைப்படத் இயக்குநருமான திரு மனோஜ் குமார் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மனோஜ் குமார் இந்திய சினிமாவின் ஒரு அடையாளம் என்று பிரதமர் கூறியுள்ளார். குறிப்பாக அவரது படங்களில் பிரதிபலிக்கும் தேசபக்திக்காக அவர் நினைவுகூரப்படுவார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

உடல் பருமனை தடுக்கவும், எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும் பிரதமர் விடுத்த அழைப்புக்கு மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்

January 31st, 06:25 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் உடல் பருமனை எதிர்த்துப் போராடவும் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும் ஒரு தெளிவான அழைப்பை விடுத்திருந்தார். இதற்கு மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து பரவலான ஆதரவு கிடைத்துள்ளது.

ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை

December 14th, 11:17 am

புகழ்பெற்ற ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனை கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று அவரைப் பிரதமர் பாராட்டியுள்ளார். ராஜ் கபூர் வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற கலாச்சாரத் தூதராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டுள் திரு நரேந்திர மோடி, அடுத்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

திரு டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 10th, 05:48 pm

ஒப்பற்ற திரைப்பட ஆளுமை திரு. டெல்லி கணேஷ் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்பழுக்கற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்ட திரு கணேஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் கையாண்ட விதத்திற்காகவும், தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களுடன் இணைக்கும் அவரது திறனுக்காகவும் அன்புடன் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.