PM chairs Fifth National Conference of Chief Secretaries in Delhi
December 28th, 09:32 pm
Prime Minister Narendra Modi addressed the 5th National Conference of Chief Secretaries in Delhi, earlier today. The three-day Conference was held in Pusa, Delhi from 26 to 28 December, 2025.பிரதமர் சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா தொழிற்சாலையை நவம்பர் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார்
November 25th, 04:16 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா (SAESI) தொழிற்சாலையை திறந்து வைப்பார்.மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்
September 12th, 02:12 pm
மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.For the benefits of central schemes to reach Bengal, a BJP government is essential: PM Modi in Kolkata
August 22nd, 06:00 pm
PM Modi addressed an overflowing crowd gathered at a public meeting in Kolkata where he declared that Bengal’s rise is essential for India’s rise. He firmly reassured, “The BJP government at the Centre has continuously supported Bengal’s growth. From highways to railways, Bengal has received three times more funds than under UPA. But the biggest challenge is that funds sent from Delhi are looted by the state government and not spent on people’s welfare. Instead, they are siphoned off to TMC cadres,” he said.PM Modi’s Kolkata rally: Call for a Viksit Bangla, real ‘poriborton’ and end of TMC’s misrule!
August 22nd, 05:57 pm
PM Modi addressed an overflowing crowd gathered at a public meeting in Kolkata where he declared that Bengal’s rise is essential for India’s rise. He firmly reassured, “The BJP government at the Centre has continuously supported Bengal’s growth. From highways to railways, Bengal has received three times more funds than under UPA. But the biggest challenge is that funds sent from Delhi are looted by the state government and not spent on people’s welfare. Instead, they are siphoned off to TMC cadres,” he said.துவாரகா விரைவுச் சாலை மற்றும் நகர விரிவாக்க சாலை-II திட்டங்களின் தில்லி பிரிவைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 17th, 12:45 pm
எனது அமைச்சரவை நண்பர் திரு நிதின் கட்கரி அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் சக்சேனா அவர்களே, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திரு ஹர்ஷ் மல்கோத்ரா அவர்களே, தில்லி மற்றும் ஹரியானாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாநில அமைச்சர்களே, இதர பிரதிநிதிகளே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே,பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்
August 17th, 12:39 pm
தில்லியின் ரோஹிணியில் சுமார் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.08.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விரைவுச் சாலையின் பெயர் துவாரகா என்றும், நிகழ்ச்சி ரோஹிணியில் நடைபெறுவதாகவும் கூறி, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜென்மாஷ்டமிப் பண்டிகையின் உணர்வை எடுத்துரைத்த அவர், துவாரகாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது தற்செயல் நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டார். முழு நிகழ்வும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியால் நிரம்பி இருப்பதாகப் பிரதமர் கூறினார்.கர்நாடகாவின் பெங்களூருவில் பல்வேறு மெட்ரோ திட்டங்களின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
August 10th, 01:30 pm
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதல்வர் திரு சித்தராமையா அவர்களே, மத்தியில் உள்ள எனது சகாக்கள் திரு மனோகர் லால் கட்டார், திரு ஹெச்டி குமாரசாமி, திரு அஷ்வினி வைஷ்ணவ், திரு வி சோமன்னா, திருமதி ஷோபா அவர்களே, துணை முதல்வர் திரு டி.கே.சிவகுமார் அவர்களே, கர்நாடக அமைச்சர் திரு பி.சுரேஷ் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு ஆர். அசோக் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா அவர்களே, டாக்டர் மஞ்சுநாத் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயேந்திர எடியூரப்பா அவர்களே மற்றும் கர்நாடகாவின் எனது சகோதர சகோதரிகளே!கர்நாடகாவின் பெங்களூருவில் சுமார் ₹22,800 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
August 10th, 01:05 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ₹ 7,160 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் வழித்தடப் பாதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.08.2025) திறந்து வைத்தார். பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் மூன்று வந்தே பாரத் விரைவு ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கர்நாடக மாநிலத்தில் கால் வைத்தவுடன், தான் ஒரு சிறந்த உணர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவின் கலாச்சார செழுமை, அதன் மக்களின் பாசம், இதயத்தை ஆழமாகத் தொடும் கன்னட மொழியின் இனிமை ஆகியவற்றை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, பெங்களூருவின் தலைமை தெய்வமான அன்னம்மா தாயின் பாதங்களில் மரியாதை செலுத்தி தமது உரையைத் தொடங்குவதாகக் கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நடபிரபு கெம்பேகவுடா பெங்களூரு நகரத்திற்கு அடித்தளமிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், கெம்பேகவுடா பாரம்பரியத்தில் வேரூன்றியதாக இந்த நகரம் உள்ளது என்பதை எடுத்துரைத்தார். முன்னேற்றத்தின் புதிய உயரங்களை இந்நகரம் எட்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பெங்களூரு எப்போதும் சிறந்த உணர்வை பாதுகாத்து வருகிறது எனவும் இப்போது பெங்களூரு புதிய கனவுகளை நனவாக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.புதுதில்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
August 07th, 09:20 am
எனது அமைச்சரவை சகா திரு சிவராஜ் சிங் சௌஹான், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த், சுவாமிநாதன் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இங்கு இருப்பதையும் நான் காண்கிறேன். அவர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விஞ்ஞானிகள், சிறப்பு விருந்தினர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களே!பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் உரையாற்றினார்
August 07th, 09:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை இன்று (07 ஆகஸ்ட், 2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது பங்களிப்பு ஒரே சகாப்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். புகழ்பெற்ற விஞ்ஞானியான எம் எஸ் சுவாமிநாதன் அறிவியலை பொதுச் சேவைக்கான ஊடகமாக மாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டார். நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். நாட்டின் கொள்கைகளை வகுப்பதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளிலும் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது சீரிய சிந்தனைகள் தொடர்ந்து வழிகாட்டியாக அமையும் என்று பிரதமர் கூறினார். எம் எஸ் சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.ஆறு மாநிலங்களில் நான்கு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 31st, 03:13 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.07.2025) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் 4 பல் தட ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மொத்த செலவு மதிப்பீடு 11,169 கோடி ரூபாய் ஆகும்.We will reduce terrorists to dust, their handlers will face unimaginable punishment: PM Modi in Lok Sabha
July 29th, 05:32 pm
Prime Minister Narendra Modi, speaking in the Lok Sabha during the special discussion on Operation Sindoor, strongly defended the military action taken in response to the April 22 terror attack in Pahalgam. He took sharp aim at the Congress, accusing it of undermining the morale of the armed forces. “India received support from across the world, but it is unfortunate that the Congress could not stand with the bravery of our soldiers,” the Prime Minister said.ஆபரேஷன் சிந்தூர் குறித்த மக்களவை சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் விஜய் உத்சவ் (வெற்றி விழா) இந்திய ஆயுதப் படைகளின் வீரத்திற்கும் வலிமைக்கும் ஒரு சான்றாகும்: பிரதமர்
July 29th, 05:00 pm
பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான, தீர்க்கமான 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். அவையின் கூட்டத்தொடர் தொடக்கத்தில் ஊடகவியலாளர்களுடனான தமது உரையாடலை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த அமர்வு இந்தியாவின் வெற்றியின் கொண்டாட்டமாகவும், இந்தியாவின் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறினார்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 18th, 02:35 pm
மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி வி ஆனந்த போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான ஹர்தீப் சிங் பூரி, சந்தானு தாக்கூர், சுகந்த மஜூம்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சௌமிக் பட்டாச்சார்யா, ஜோதிர்மய் சிங் மகத்தோ அவர்களே, ஏனைய மக்கள் பிரதிநிதிகளே, எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம்!மேற்கு வங்கத்தின் துர்காபூரில் சுமார் ₹5,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்தார்.
July 18th, 02:32 pm
மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி சுமார் 5,400 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், எஃகு நகரம் என்று அழைக்கப்படும் துர்காபூர், இந்தியாவின் தொழிலாளர் சக்தியின் முக்கிய மையமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் பாராட்டினார், மேலும் இன்று அந்தப் பங்கை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று கூறினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும், எரிவாயு அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை அதிகரிக்கும் மற்றும் எஃகு நகரமாக துர்காபூரின் அடையாளத்தை வலுப்படுத்தும் என்று திரு. மோடி குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் இந்தியாவில் தயாரித்தல், உலகத்திற்காக தயாரித்தல் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன என்றும், மேற்கு வங்கத்தை முன்னேற்ற உதவும் என்றும் பிரதமர் கூறினார். பிராந்திய இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அனைவருக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.பீகார் மாநிலம் மோதிஹரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 18th, 11:50 am
இந்த புனிதமான சாவான் மாதத்தில், பீகார் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவதற்காக நான் பாபா சோமேஷ்வர்நாத்தின் பாதங்களை வணங்கி, அவரது ஆசிகளை வேண்டுகிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரி்ன் மோத்திஹரியில் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைத்தார்
July 18th, 11:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் மோத்திஹரியில் இன்று (18.07.2025) 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.