TMC government is run either by goons or only after High Court and Supreme Court orders: PM Modi in Arambagh, West Bengal
April 26th, 01:50 pm
Addressing a Vijay Sankalp rally in Arambagh, West Bengal, PM Modi remarked that after 15 years of intimidation, the people of Bengal are now determined to defeat injustice. He noted that the TMC government acts only after the court intervention. He concluded by urging people to vote decisively for BJP, stating that only a government free from fear, corruption and syndicate control can unlock Bengal’s true potential.The expiry date of this 15-year syndicate TMC raj is 4 May: PM Modi in Bangaon, West Bengal
April 26th, 01:30 pm
Addressing a massive public rally in Bangaon, West Bengal, PM Modi delivered a sharp message against TMC’s corruption, syndicate raj and fear politics. Stating that “Nari Shakti” has been the worst affected under TMC rule, he called upon women to lead the change. He also outlined BJP’s roadmap for development, security and prosperity in West Bengal and recalled the legacy of Syama Prasad Mookerjee.PM Modi’s impactful rallies in Bangaon and Arambagh, West Bengal
April 26th, 01:24 pm
PM Modi addressed massive public gatherings in Bangaon and Arambagh, delivering a sharp message against TMC’s corruption, syndicate raj and fear politics, while presenting BJP’s roadmap for development, security and prosperity in West Bengal.ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 29th, 11:01 am
மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, மத்திய இணையமைச்சர்கள் திரு ஜிதேந்திர சிங் அவர்களே, திரு ஜெயந்த் சௌத்ரி அவர்களே, திரு சுகந்தா மஜூம்தார் அவர்களே, கல்வியாளர்களே, அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களே, சிறப்பு விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்.ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
April 29th, 11:00 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களிடையே உரையாற்றிய பிரதமர் ஒய்.யு.ஜி.எம் என்பது பங்குதாரர்களின் சங்கமம் என்றார்.உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
April 09th, 09:43 pm
உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்."சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்" என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
November 18th, 08:00 pm
ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளுக்காக அதிபர் லூலாவை நான் முதலில் பாராட்ட விரும்புகிறேன்.சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்த ஜி-20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
November 18th, 07:55 pm
'சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் ஜி 20 மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததற்காகவும், சிறப்பான விருந்தோம்பலுக்காகவும் பிரேசில் அதிபர் மேதகு திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட பிரேசிலின் ஜி 20 செயல்திட்டத்தைப் பாராட்டிய அவர், இந்த அணுகுமுறை உலகளாவிய தெற்கின் கவலைகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் புதுதில்லி ஜி 20 உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் அழைப்பு ரியோ உரையாடல்களில் தொடர்ந்து எதிரொலிக்கிறது என்பதை அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
September 18th, 03:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு, முழுமையான பாதுகாப்பைப் பின்பற்றுவதன் மூலம், பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, 79,156 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் (மத்திய அரசு: 56,333 கோடி மற்றும் மாநில அரசு: 22,823 கோடி ரூபாய்) பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் ரூ. 7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
February 11th, 07:35 pm
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் சுமார் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய இந்த வளர்ச்சித் திட்டங்கள் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும். அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் சாலை, ரயில், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கும் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் ஊக்கமளிக்கும். குறிப்பாக பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கு ஆஹார் அனுதான் எனப்படும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மாதாந்திர தவணைத் தொகையைப் பிரதமர் வழங்கினார். ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவுகளை அவர் வழங்கினார். பிரதமரின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் (ஆதர்ஷ் கிராம திட்டம்) கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியை அவர் வழங்கினார்.இரண்டு கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக்க உறுதி; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் பயிற்சி: பிரதமர்
August 15th, 01:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டின் இரண்டு கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக்க நாட்டிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் அரசு இணைந்து பணியாற்றி வருவதாக, செங்கோட்டையில் ஆற்றிய 77வது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்துள்ளதாகக் கூறினார். இன்று கிராமங்களில் ஒரு சகோதரி வங்கியிலும், ஒரு சகோதரி அங்கன்வாடியிலும் ஒரு சகோதரி மருந்துகளை விநியோகம் செய்வதையும் காணலாம் என்றார்.குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற 'பாபா நீ பாரி' லக்னோத்சவ் 2022 என்ற பிரம்மாண்ட திருமண விழாவில் திரு பிரதமர் மோடி பங்கேற்பு.
November 06th, 05:32 pm
குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற 'பாபா நீ பாரி' லக்னோத்சவ் 2022 என்ற மெகா திருமண விழாவில் பிரதமர் திரு மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் திரு மோடி, இந்த விழாவில் 552 நம் மண்ணின் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கினார். மேலும், ஒருவரின் வாழ்க்கையில் தந்தை ஸ்தானத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் திரு மோடி எடுத்துரைத்தார்.ஏப்ரல் 18 முதல் 20வரை குஜராத் செல்கிறார் பிரதமர்
April 16th, 02:36 pm
பிரதமர் திரு.நரேந்திரமோடி, 2022 ஏப்ரல் 18 முதல் 20-ந் தேதி வரை குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 18 அன்று மாலை 6 மணியளவில், காந்திநகரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிடுகிறார். ஏப்ரல் 19 காலை 9.40 மணியளவில், பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால்பண்ணை வளாகத்தில், பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பிற்பகல் 3.30மணியளவில் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஏப்ரல் 20 அன்று காவை 10.30மணியளவில், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு & புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3.30மணியளவில், டாஹோத்தில் ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் பிரதமர், சுமார் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.நாட்டின் வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகம் அளிக்கிறது : பிரதமர்
April 09th, 09:01 am
நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு ஜல்ஜீவன் இயக்கம் புதிய உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.சுகாதாரத் துறையில் மத்திய பட்ஜெட்டின் நேர்மறையான தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 26th, 02:08 pm
கடந்த 7 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றத்தின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமது சுகாதார சேவையில் நாம் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறோம். தற்போது சுகாதாரத்தில் மட்டுமின்றி, அதற்கு சமமாக நல வாழ்விலும் கவனம் செலுத்தப்படுகிறது.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 26th, 09:35 am
மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் பங்கேற்கும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகளில் இது ஐந்தாவதாகும். மத்திய அமைச்சர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார மேலாண்மை, தொழிற்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.Double engine government in Punjab will ensure development, put an end to mafias: PM Modi
February 17th, 11:59 am
Continuing his election campaigning spree, PM Modi addressed a rally in Punjab’s Fazilka. Addressing the huge rally, he said, “Today Punjab needs a government that draws inspiration from patriotism, from the development of Punjab. BJP has come before you with dedication, with the resolve of security and development of Punjab.”PM Modi addresses a Vishal Jan Sabha in Punjab’s Fazilka
February 17th, 11:54 am
Continuing his election campaigning spree, PM Modi addressed a rally in Punjab’s Fazilka. Addressing the huge rally, he said, “Today Punjab needs a government that draws inspiration from patriotism, from the development of Punjab. BJP has come before you with dedication, with the resolve of security and development of Punjab.”மத்திய பட்ஜெட் 2022-23 குறித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 01st, 02:23 pm
நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவுக்கு இடையே வளர்ச்சியின் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதுடன் சாமான்ய மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த பட்ஜெட் உருவாக்கும்.‘மக்களுக்கு உகந்த முற்போக்கான பட்ஜெட்டிற்காக’ நிதியமைச்சரையும், அவரது குழுவினரையும் பிரதமர் பாராட்டியுள்ளார்
February 01st, 02:22 pm
நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவுக்கு இடையே வளர்ச்சியின் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் வந்துள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். “பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதுடன் சாமான்ய மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த பட்ஜெட் உருவாக்கும்” என்று அவர் கூறினார்.