நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
August 15th, 07:26 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்
August 15th, 03:52 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செங்கோட்டையில் 103 நிமிடங்கள் நீடித்த திரு நரேந்திர மோடியின் உரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக அமைந்தது. மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையாகும். பிரதமரின் உரை, தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு தேசத்திலிருந்து உலகளவில் நம்பிக்கையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.சுதந்திர தினத்தில் விவசாயிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் மரியாதை பாரதத்தின் முதுகெலும்பு விவசாயிகள் என புகழாரம்
August 15th, 12:02 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுக்கு உணர்ச்சிபூர்வமாக மரியாதை செலுத்தினார். அவர்கள் நாட்டின் சுயசார்புக்கான பயணத்தின் முதுகெலும்பு என்று அவர் கூறினார். காலனித்துவ ஆட்சி நாட்டை எவ்வாறு வறுமையில் ஆழ்த்தியது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் விவசாயிகளின் அயராத முயற்சிகள்தான் இந்தியாவின் தானியக் கிடங்குகளை நிரப்பி, நாட்டின் உணவு இறையாண்மையைப் பாதுகாத்தன என அவர் குறிப்பிட்டார். அவரது உரையில் இந்திய விவசாயத்தின் எதிர்காலத்திற்கான தெளிவான பாதையுடன் மனமார்ந்த நன்றியுணர்வும் இணைந்திருந்தது.பிரதமர் மோடியின் 79-வது சுதந்திர தின உரை: 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட உரை
August 15th, 11:58 am
நாட்டின் 79-வது சுதந்திர தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து தமது மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையை 103 நிமிடங்கள் நிகழ்த்தினார். 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல்திட்டத்தை அவர் வழங்கினார். தற்சார்பு, புதுமை மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக இந்தியா பயணிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார் .பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையின் போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
August 15th, 10:32 am
பிரதமர் திரு நரேந்திர மோடி 12-வது முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து ஆற்றிய தமது சுதந்திர தின உரையில், இந்தியாவின் அடுத்த எழுச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த 79-வது சுதந்திர தினத்தன்று, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு தேசத்திற்குத் தேவையான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை: சீர்திருத்தம், தற்சார்பு, ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட உரை
August 15th, 10:23 am
நாட்டின் 79-வது சுதந்திர தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியாவின் தன்னம்பிக்கை, மாற்றத்திற்கான பயணம் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தியா சீர்திருத்தம், செயல்திறன் ஆகியவற்றால் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது இன்னும் அதிக வலிமையுடன் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறினார். சட்டங்கள், ஒழுங்குமுறைகள், செயல்முறைகள் ஆகியவை எளிமைப்படுத்தப்பட்டு, தொழில்முனைவு ஊக்குவிக்கப்பட்டு் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.தற்சார்பு பாரதம்: வலுவான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளம்
August 15th, 10:20 am
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, விண்வெளி, உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் முன்னேற்றங்களை மேற்கோள் காட்டி, வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக தற்சார்பு பாரதத்தை சுட்டிக் காட்டினார். ஆபரேஷன் சிந்தூரை எடுத்துரைத்த அவர், இதில் உள்நாட்டு திறன்கள் மூலம் அச்சுறுத்தல்களை தீர்க்கமாக எதிர்கொள்ளப்பட்டதாக கூறினார். தன்னம்பிக்கை, தேசிய வலிமை, கண்ணியம் ஆகியவை, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
இந்த மாபெரும் சுதந்திர தின விழா நமது நாட்டு மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும். இந்த சுதந்திர தின விழா கூட்டு சாதனைகளின் தருணம், பெருமையின் தருணம். நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன. தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். பாலைவனங்கள், இமயமலைச் சிகரங்கள், கடற்கரைகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே எதிரொலி, ஒரே ஆரவாரம். நம் தாய்நாட்டின் புகழ், உயிரை விட நமக்கு மிகவும் மேலானது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற 79வது சுதந்திர தினத்தின் காட்சிகள்
August 15th, 06:45 am
79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், அரசியலமைப்பு சபை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 2047க்குள் ஒரு விக்ஸித் பாரதத்தை (வளர்ந்த இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா, தேசிய விளையாட்டுக் கொள்கை மற்றும் சுதர்ஷன் சக்ரா மிஷன் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.