இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் அக்டோபர் 8 அன்று தொடங்கி வைக்கிறார்

October 07th, 10:27 am

ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வான இந்திய மொபைல் மாநாட்டின் 9-வது பதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி யஷோபூமியில் 2025 அக்டோபர் 8 அன்று காலை மணி 9.45-க்கு தொடங்கிவைக்கிறார். தொலைத்தொடர்புத் துறை, இந்திய செல்லுலார் சேவையாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு அக்டோபர் 8 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில், டிஜிட்டல் மாற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடியை பின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்

August 27th, 08:32 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியை பின்லாந்து அதிபர் மாண்புமிகு திரு அலெக்சாண்டர் ஸ்டப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் மோதலைத் தீர்ப்பது தொடர்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்களுக்கு இடையே வாஷிங்டனில் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்த தனது கருத்துக்களை அதிபர் திரு ஸ்டப் பகிர்ந்து கொண்டார்.

கூட்டறிக்கை: இந்திய-ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் 2-வது கூட்டம் புதுதில்லியில் இன்று (28.02.2025) நடைபெற்றது

February 28th, 06:25 pm

இந்தியா - ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் 2-வது கூட்டம் இன்று (2025 பிப்ரவரி 28-ம் தேதி) புதுதில்லியில் நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஐரோப்பிய யூனியன் சார்பில் தொழில்நுட்ப இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான நிர்வாக துணைத் தலைவர் திருமதி ஹென்னா விர்க்குனென், புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான ஆணையர் திருமதி எகடெரினா ஜஹாரிவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.