நாட்டின் 11 ஆண்டுகால உள்கட்டமைப்பு வசதியில் ஏற்பட்டுள்ள புரட்சி குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்
June 11th, 10:17 am
நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் 11 ஆண்டுகால ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. ரயில்வே, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், குடிமக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.